தமிழ் சினிமாவில் தத்துவம், கவித்துவம், காதல், சோகம், பாசம் நவரசங்களையும் தனது பாடல் மூலம் வெளிப்படுத்திய கவிஞர் கவியரசு கண்ணதாசன். 1949-ம் ஆண்டு கன்னியின் காதலி என்ற படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக அறிமுகமான கண்ணதாசன், தனது எழுத்தின் மூலம் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட க்ளாசிக் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்த கண்ணதாசன், ஏராளமான படத்திற்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.
மேலும் பல படங்களை தயாரித்துள்ள கண்ணதாசன், காலத்தால் அழியாக பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அவரது பாடல்கள் இன்றைய காலக்கட்டத்திலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. எம்.ஜி.ஆர் காலத்தில் தமிழகத்தின் அரசவை கவிஞராக கண்ணதாசன் இருந்துள்ளார். இத்தனை பெருமைக்களுக்கு சொந்தக்காரரான இவர் எழுதிய ஒரு பாடலுக்காக சிவாஜி கோபப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.
கடந்த 1977-ம் ஆண்டு இயக்குனர் பிரகாஷ்ராவ் இயக்கத்தில் வெளியான படம் அவன் ஒரு சரித்திரம். சிவாஜி, மஞ்சுளா, பண்டரிபாய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்ததது. இந்த படத்தில் அம்மானை அழகு மிகு கண்மானை என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த பாடலாக இருந்தது.
இதில் அம்மானை என்ற சொல், அந்த மானை.. அந்த காலத்தில் பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு, அம்மானை என்றால் வழிபாடு, மற்றொன்று.. அம்மானை என்றால் தாய் மாமனை குறிக்கும் ஒரு சொல் என அந்த வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. இப்படி பல அர்த்தங்களை கொண்ட இந்த வார்த்தையை கவிநயத்துடன் கண்ணதாசன் இந்த பாடலில் பயன்படுத்தி இருப்பார்.
தரமான இலக்கிய பாடலான கொடுத்த கண்ணதாசனை நினைத்து பெருமைப்பட்டசிவாஜி கணேசன், கண்ணதாசன் கொடுத்த இந்த பிரம்மாண்ட பாடலை எப்படி படமாக்கலாம் என்று படக்குழுவினர் யோசித்தபோது, ஒரு பூங்காவில் வைத்து சாதாரணமாக படமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை கேள்விப்பட்ட சிவாஜி, படக்குழுவினரிடம் கண்ணதாசன் இவ்வளவு ஆழமாக ஒரு பாடலை கொடுத்துள்ளார். அதேபோல் டி.எம்.எஸ். வாணி ஜெயராம் இருவரும் சிறப்பாக பாடியுள்ளனர். இதை எப்படி சதாரணமாக படமாக்குவது என கேட்டு பாடலை கெடுத்துவிடாதீர்கள் என்று கோபமடைந்துள்ளார்.
சிவாஜியின் கோபத்தை கேட்ட படக்குழுவினர், அவரை சமாதானப்படுத்தி படப்பிடிப்புக்கு அழைத்து சென்று சொன்னபடியே பூங்காவில் வைத்து படமாக்கியுள்ளனர். இதனால் இறுதியில் படத்தின் இயக்குனர் பிரகாஷ் ராவிடம் சிவாஜி கோபப்பட்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil