தள்ளிப்போன புஷ்பா 2 : சுதந்திர தினத்தை குறி வைக்கும் 5 தமிழ் படங்கள் : பட்டியலில் இணைந்த கவின்

புஷ்பா 2 படத்தின் வெளியீடு தள்ளிப்போனதால் முன்னணி ஹீரோக்களின் தமிழ் படங்கள் சுதந்திர தின ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

புஷ்பா 2 படத்தின் வெளியீடு தள்ளிப்போனதால் முன்னணி ஹீரோக்களின் தமிழ் படங்கள் சுதந்திர தின ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Pushpa 2 Vanangaa

புஷ்பா 2, தங்கலான் - வணங்கான்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியாக இருந்த புஷ்பா 2 திரைப்படம் தள்ளிப்போனதால், அந்த தேதியில் வெளியாக 5 தமிழ் படங்கள் வரிசை கட்டி காத்திருக்கின்றன.

Advertisment

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா. சுனில், உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்த நிலையில், படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் நடிகர் பகத் பாசில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான புஷ்பா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், வசூலில் சாதனை படைத்திருந்தது. இதனைத்தொடர்ந்து உடனடியாக புஷ்பா 2 படத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. 2 வருடங்களுக்கு மேலாக இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், ஆகஸ்ட் 15-ந் தேதி புஷ்பா 2 படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனிடையே தற்போது படத்தின் பணிகள் முடிவடையாக காரணத்தால் படத்தின் வெளியீடு டிசம்பர் 6-ந் தேதிக்க தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புஷ்பா 2 படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதால் தமிழ் படங்கள் தங்களது வெளியீட்டை தள்ளி வைத்த நிலையில், தற்போது புஷ்பா 2 டிசம்பர் மாதத்திற்கு தள்ளிப்போயுள்ளதால், முன்னணி தமிழ் படங்கள் ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது.

Advertisment
Advertisements

அதன்படி, கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதன்பிறகு தள்ளிப்போன விக்ரமின் தங்கலான், அருண் விஜய் நடிப்பில் சூர்யா நடித்துள்ள வணங்கான், கார்த்திக், அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன், ஜெயம் ரவி நித்யா மேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியள்ளது. இதில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக தற்போது முன்னணி இளம் நடிகராக மாறியுள்ள கவின், நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தயாரித்துள்ள பிலாடி பெக்கர் படம் ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியாகும் என்ற கூறப்படுகிறது.

தற்போது 3 மாதத்திற்கு ஒரு படம் வெளியிடும் கவின், நடிப்பில் சமீபத்தில் வெளியான ஸ்டார் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதற்கு முன்பு வெளியான டாடா படம் கவினுக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தத நிலையில், தற்போது முன்னணி நடிகர்களின் படங்களுடன் கவின் படம் வெளியாக உள்ளது.   

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News Biggboss Kavin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: