Advertisment

3 நடிகர்கள்... 2 நடிகைகள்... வேற யாருக்கு எல்லாம் மும்பையில் வீடு இருக்குன்னு பாருங்க!

வட இந்தியாவை பூர்வீகமாக கொண்டு தமிழில் அறிமுகமான பல நடிகைகள் தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Tamil Actors

தமிழ் நடிகர்களின் மும்பை வீடு

சமீப காலமாக தமிழ் நடிகர்கள் பலரும் பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்துவது தொடர்ந்து வருகிறது. தமிழில் வெற்றியடைந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யும்போதோ அல்லது டப்பிங் செய்து வெளியிடும்போதோ ஒரிஜினல் படத்தில் நடித்த நடிகர்களுக்கு மற்ற மொழிகளிலும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

Advertisment

அதேபோல் தமிழ் போன்ற தென்னிந்திய மொழி நடிகர்களுக்கு பாலிவுட் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதில் ஒரு சில நடிகர்கள் பாலிவுட் சினிமாவில் கால்பதித்துள்ள நிலையில், வட இந்தியாவை பூர்வீகமாக கொண்டு தமிழில் அறிமுகமான பல நடிகைகள் தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்து வருகின்றனர். அதேபோல் பாலிவுட் படங்கள் மட்டுமல்லாமல் மும்பையில் வீடு வாங்குவது குறித்து தென்னிந்திய நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  

தனுஷ்

தனது உலகளாவிய ஹிட் பாடலான '3' படத்தில் 'வை திஸ் கொலவெறி டி' மூலம் புகழ் பெற்ற நடிகர் தனுஷ்,  அதனைத் தொடர்ந்து ஹிந்தியில் அறிமுகம் ஆனார். அவர் இந்தியில் நடித்த ராஞ்சனா, ஷமிதாப் உள்ளிட்ட படங்கள் தனுஷ்க்கு வெற்றியை கொடுத்தது. இதனிடையே படத்திற்காக கதைகளைக் கேட்கும் போது ஹோட்டலில் திரைப்பட தயாரிப்பாளர்களை சந்திக்க விரும்பாத தனுஷ் மும்பையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார். இது பாலிவுட் நட்சத்திரங்களுடன் அவருக்கு நெருக்கமான நட்பை ஏற்படுத்தியது, மேலும் அவர் மும்பைக்கு செல்லும் போதெல்லாம் வீட்டைப் பயன்படுத்துகிறார்.

மாதவன்

தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் பரபரப்பாக நடித்து வரும் மாதவன், மேலும் தொடர்ந்து படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். அதனால் பரபரப்பான நகரத்தில் தனக்கு நிரந்தர இடம் கிடைக்க மும்பையில் ஒரு வீட்டை வைத்துள்ளார் மாதவன். ஆனால் பிஸியான நடிகராக வலம்வரும் மாதவன் பெரும்பாலும் மும்பை வீட்டில் தங்குகிறார், அதுவும் ஆடம்பரமான வீடு.

காஜல் அகர்வால்

தமிழ் மற்றும் தெலுங்கில் படங்களில் பிசியாக இருக்கும் காஜல் அகர்வால், 2020ல் தனது நீண்ட நாள் நண்பரான கௌதம் கிச்சுலுவை திருமணம் செய்து கொண்டார். 2021ல் மும்பையில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் ஆடம்பரமான பிளாட் ஒன்றை வாங்கியுள்ளார் அவரது கணவர். காஜல் அகர்வால் தற்போது தனது மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார், மேலும் அவர் தனது படங்களின் படப்பிடிப்பின் போது மட்டும் தென்னிந்தியாவிற்கு வருகிறார்.

தமன்னா

'பாகுபலி' நடிகை தமன்னா, திரைப்படங்களில் நடித்ததற்காக கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார், தற்போது அவர் இந்தி மற்றும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமன்னாவுக்கு சொந்தமாக மும்பையில் உள்ள ஜூஹு-வெர்சோவா லிங்க் சாலையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. தனது வீட்டை தனக்கு பிடித்த பொருட்களால் அலங்கரித்துள்ளார், மேலும் அவரது சில சமூக ஊடக படங்கள் அவரது மும்பை வீட்டை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.

சூர்யா

மும்பையில் வீடு வைத்திருக்கும் தமிழ் நடிகர்கள் பட்டியலில் சமீபத்தில் இணைந்தவர் சூர்யா. சூர்யா தனது குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் இந்தி வெப் தொடரில் நடித்து வரும் மனைவி ஜோதிகாவின் அர்ப்பணிப்பை கருத்தில் கொண்டு தனது குடும்பத்துடன் மும்பைக்கு மாறியுள்ளார். சூர்யாவின் மும்பை வீடு ரூ. 70 கோடி என்று கூறப்படுகிறது, இதன் மூலம் நடிகர் சூர்யா முக்கியமாக அடுத்த சில ஆண்டுகளுக்கு மும்பை வீட்டில் தங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment