Advertisment

பல வருடங்களுக்கு பின் வெளியில் வந்த நடிகை... குட்டி பத்மினியுடன் இருப்பது யார் தெரியுமா?

90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஒருவர் பல வருடம் கழித்து வெளியுலகிற்கு திரும்பியுள்ளார். இது குறித்து பழம்பெரும் நடிகை குட்டி பத்மினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Kanaka Kutty Padmini

நடிகை கனகாவுடன் குட்டி பத்மினி

கடந்த சில ஆண்டுகளாக பொதுவெளியில் முகம் காட்டாமல் வீட்டிற்குள் முடங்கி கிடந்த கரகாட்டக்காரன் பட நாயகி கனகா தற்போது நடிகை குட்டி பத்மினியுடன் போஸ் கொடுத்துள்ள புதிய புகைப்படம் இணையத்தில வைரலாகி வருகிறது.

Advertisment

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகை தேவிகா. 150 படங்களுக்கு மேல் நடித்து கவிஞர் கண்ணதாசனிடம் பாராட்டுக்களை பெற்ற ஒரு நடிகை என்ற பெருமைய பெற்றுள்ள தேவிகாவின் மகள் தான் நடிகை கனகா. 1989-ம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்.

தொடர்ந்து, விஜயகாந்த், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஒரு சில படங்களில் கனகா நடித்திருந்த நிலையில், 1990-ம் ஆண்டு தனது கணவரை விவாகரத்து செய்த நடிகை தேவிகா மகள் கனகாவுடன் தனியாக வசித்து வந்த நிலையில், 2002-ம் ஆண்டு தேவிகா மரணமடைந்தார். இதனால் தனிமையான உணர்ந்த கனகா, தந்தையுடன் பிரச்சனை, சொத்து தகராறு உள்ளிட்ட பல பிரச்சனைகளின் காரணமாக வெளியில் வராமல் தனிமையில் வசித்து வந்தார்.

இதனிடையே நடிகை கனகாவை நேரில் சந்தித்த நடிகை குட்டி பத்மினி சென்னையில் ஒரு ஹோட்டலில் நீண்ட நேரம் பேசியுள்ளனர். இத்தனை ஆண்டு நினைவுகள் பல்வேறு சம்பவங்கள் குறித்து உரையாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு எனது அன்பான தங்கயுடன் என்று குட்டி பத்மினி கனகாவுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment