Advertisment

கலெக்டர் பதவியை ராஜினாமா செய்யும் சுந்தரி: அட்வைஸ் பண்ணும் 90'ஸ் ஹீரோயின் யாருன்னு தெரியுதா?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி 2 சீரியலில், இந்த வாரம் சுந்தரி தனது கலெக்டர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து கடிதம் அளிக்கும்போது, யாரும் எதிர்பாராத விதமாக, 90’ஸ் ஹீரோயின் அவருக்கு அட்வைஸ் செய்கிறார்.

author-image
WebDesk
New Update
kausalya 1

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி 2 சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி 2 சீரியலில், இந்த வாரம் சுந்தரி தனது கலெக்டர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து கடிதம் அளிக்கும்போது, யாரும் எதிர்பாராத விதமாக, 90’ஸ் ஹீரோயின் அவருக்கு அட்வைஸ் செய்கிறார்.

Advertisment

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி 2 சீரியல் டி.ஆர்.பி-யில் கலக்கி வருகிறது. டாப் 5 சீரியல்களில் ஒன்றாக ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்த சீரியலில், சுந்தரி தனது கலெக்டர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து, ராஜினாமா கடிதம் அளிக்கும்போது, தமிழ் சினிமாவின் 90-ஸ் ஹீரோயின் அவருக்கு அட்வைஸ் செய்கிறார். 

சுந்தரி 2 சீரியலில் அந்த நடிகையைப் பார்த்த 90-ஸ் கால இளைஞர்கள் ரசிகர்கள், சில நொடிகளிலேயே அடையாளம் தெரிந்துகொண்டனர். அதனால், உங்களுக்கும் யார் இந்த நடிகை என தெரியுதா பாருங்கள். 

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சுந்தரி 2 சீரியலின் புரோமோவில், 90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த கௌசல்யா என்ட்ரி கொடுத்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை கௌசல்யா. கார்த்திக், பிரஷாந்த், பிரபுதேவா, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்.

அவ்வப்போது சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் கௌசல்யா, சீரியல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது சுந்தரி 2 சீரியலில் கௌசல்யா என்ட்ரி கொடுத்து இருக்கிறார். கலெக்டர் பதவியை சுந்தரி ராஜினாமா செய்ய முடிவெடுக்கும் நிலையில், அவருக்கு கௌசல்யா அட்வைஸ் பண்ணுகிறார்.

தற்போது வெளியாகி இருக்கும் சுந்தரி 2 சீரியலின் புரோமோவைப் பார்த்த 90-ஸ் இளைஞர்கள்,  நடிகை கௌசல்யாவைப் பார்த்து நாஸ்டால்ஜியாவுக்குள் சென்று அவர் நடித்த படங்களைப் பற்றி பேசி வருகிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sundari Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment