/tamil-ie/media/media_files/uploads/2023/07/Gouri-K-Kishan.jpg)
36 பட நடிகை கவுரி கே கிஷான்
விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 96 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கவுரி கிஷான்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Gouri-2.jpg)
இந்த படத்தில் இளம் வயது த்ரிஷாவாக சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுக்களை பெற்ற இவர், மார்கம்கலி என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Gouri-3.jpg)
அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து அசத்தினார். இந்த படத்தில் நடிகர் சாந்தனுவுக்கு ஜோடியாக கவுரி கிஷான் நடித்திருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Gouri-4.jpg)
தொடர்ந்து 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தில் நடித்த கவுரி கிஷான், தனுஷின் கர்ணன் படத்திலும் கல்லூரி மாணவியாக நடித்து அசத்தியிருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Gouri-5.jpg)
அடுத்து புத்தம்புது காலை, பிகினிங், உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த கவுரி கிஷான், அடுத்து அடியே என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Gouri-6.jpg)
தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்க உள்ளிட்ட மொழிபடங்களில் நடித்து வரும இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Gouri-7.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் கவுரி கிஷான் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Gouri-1.jpg)
அந்த வகையில் தற்போது சுற்றுலா சென்றுள்ள கவுரி கிஷான் கடற்கரையில் இருந்தபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.