Advertisment

அஜித் படத்தில் அறிமுகம்... விஜய்க்கு ஜோடியாக 2 படம் : இந்த நடிகை யார்னு தெரியுதா?

விஜய்யுடன் லவ் டுடே, நிலவே வா, கார்த்தியுடன் கோகுலத்தில் சீதை, பிரபுவுடன் பொன்மனம், ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Actress Suvalakshmi

தமிழ் சினிமா ஆசை பட நானை சுவலட்சுமி

ஆசை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுவலட்சுமி. வசந்த இயக்கிய இந்த படத்தில் அஜித் நாயகனாக நடித்த நிலையில், பிரகாஷ்ராஜ் கொடூர வில்லனாக நடித்திருந்தார். தேவா இசையமைப்பில் உருவான இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்றும் கேட்டு ரசிக்கக்கூடிய பாடல்களில் முக்கிய இடங்களை பெற்றுள்ளது.

Advertisment

இந்த படத்திற்கு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு, விஜய்யுடன் லவ் டுடே, நிலவே வா, கார்த்தியுடன் கோகுலத்தில் சீதை, பிரபுவுடன் பொன்மனம், ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருந்த சுவலட்சுமியின் சினிமா அறிமுகம், இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக இருந்த சத்யஜித் ரே மூலம் கிடைத்துள்ளது.  தனது நடனத் திறமையால் சத்யஜித் ரே வின் கவனத்தை ஈர்த்தவர் சுவலட்சுமி.

அந்த மேடை நிகழ்ச்சிகளில் ஒன்றைப் பார்த்த பிறகு தனது உத்தரன் திரைப்படத்தில் அவருக்கு முக்கிய கேரக்டரை கொடுத்த சத்யஜித் ரே படப்பிடிப்பு நிறைவடையும் முன்பே மரணமடைந்தார். இதனால் மீதி படப்படிப்பை, அவரது மகன் சந்தீப் ரே முடித்த நிலையில், படம் வெளியாகி உலகளாவிய திரைப்பட விழாக்களில் பாராட்டைப் பெற்றது. 1994-ல் பெங்காலியில் வெளியான உத்தரன் படம் தொடங்கி 2003-ம் ஆண்டு பொன்வன்னன் இயக்கத்தில் வெளியான நிதி கரையினிலே என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

இந்த படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான சிறப்பு விருதை பெற்ற சுவலட்சுமி,  கடந்த 2002-ம் ஆண்டு  கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபரும் பேராசிரியருமான ஸ்வாகடோ பானர்ஜி என்பரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, தனது கணவரின் தொழில்களை நிர்வகித்து வந்த சுவலட்சுமி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் குடியேறினார்.

தொடர்ந்து, 2013 ஆம் ஆண்டில், அவர் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலை பல்கலைக்கழகத்தின் அகாடமியில் ஓவிய நுண்கலை பிரிவில் முதுகலைப் பெற்றார். சுவலட்சுமி, அமெரிக்காவில் தனது வாழ்க்கைக்கு வெற்றிகரமாக மாறினார். வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டாலும், திருமணத்திற்குப் பிறகும் சுவலட்சுமிக்கு தமிழ் படங்கள் மற்றும் சீரியல்களுக்கான வாய்ப்புகள் தொடர்ந்து வந்தன.

Kayal Devaraj Suvalakshmi

குறிப்பிடத்தக்க வகையில், ஜெயம் ரவி நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும் அவர் நிராகரித்தார். சுவலட்சுமி தனது நடிப்பு வாழ்க்கைக்கு கூடுதலாக, ஓவிய உலகில் நுழைந்துள்ள நிலையில், தனக்கென ஒரு இணையதளத்தை தொடங்கி, அதில் தனது தற்போதைய வேலை பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார், இன் மை இமேஜினேஷன், தி டோட் கிங் மற்றும் தி ஸ்டோர்மி சீ போன்ற குழந்தைகளுக்கான அழகான ஓவியங்களை பதிவிட்டு வருகிறார்.

Kayal Devaraj Suvalakshmi

இதனிடையே சுவலட்சுமியின் திருமண புகைப்படம், மற்றும் நடிகர் கயல் தேவராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தனது திருமண புகைப்படத்தில் சுவலட்சுமி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சுவலட்சுமி குறித்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Ajith suvalakshmi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment