Advertisment

அர்ஜுனுக்கு சம்பந்தி ஆன தம்பி ராமையா... ஐஸ்வர்யா - உமாபதி நிச்சயதார்த்த புகைப்படம் வைரல்

விஷால் நடிப்பில் பட்டத்து யானை என்ற படத்தில் அறிமுகமான ஐஸ்வர்யா அதன்பிறகு தனது அப்பா அர்ஜூன் இயக்கத்தில் சொல்லிவிடவா என்ற படத்தில் நடித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Arjun Daughter

அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா - தம்பி ராமையா மகன் உமாபதி நிச்சயதார்த்தம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்ட நிலையில், இந்த நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் நடிகர் அர்ஜூன். ஆக்ஷன் கிங் என்று பெயரெடுத்த இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் ஜெய்ஹிந்த் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ள அர்ஜூன் தற்போது படங்களில் நாயகனாகவும், முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் ஹாரோல்ட் தாஸ் என்ற கேரக்டரில் நடித்து பாராட்டுக்களை பெற்று வரும் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யா நடிப்பில் ஒரு படத்தை தயாரித்து இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. விஷால் நடிப்பில் பட்டத்து யானை என்ற படத்தில் அறிமுகமான ஐஸ்வர்யா அதன்பிறகு தனது அப்பா அர்ஜூன் இயக்கத்தில் சொல்லிவிடவா என்ற படத்தில் நடித்திருந்தார்.

Arjun Daughter

அதேபோல் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் தம்பி ராமையா. மனுநீதி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், மணியார் குடும்பம் உள்ளிட்ட 3 படங்களைய இயக்கியுள்ளார். இவரது மகன் உமாபதி 2017-ம் ஆண்டு வெளியான அதாகப்பட்டது மகா ஜனங்களே என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, மணியார் குடும்பம், திருமணம், தண்ணி வண்டி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

ஜீ தமிழில் அர்ஜூன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் உமாபதி போட்டியாளராக பங்கேற்றிருந்தார். இதனிடையே அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவும் – உமாபதியும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதலுக்கு அர்ஜூன் தம்பி ராமையா இருவரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இவர்களின் நிச்சயதார்த்தம் சென்னையில் இன்று நடைபெற்றது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.

விரைவில் இவர்களது திருமணம் நடைபெற உள்ள நிலையில், நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Update Thambi Ramaiah Arjun Sarja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment