இன்றைய காலம், நாடோடிகள் படம் மாதிரி: இவ்ளோ ஸ்பீடு தெரியுமா? பரிதாபங்கள் பற்றி பேசிய அதர்வா!

அதர்வா நடித்துள்ள தனல் திரைப்படம், நாளை (செப்டம்பர் 12) வெளியாக உள்ளது. இந்த படம் தொடர்பான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் அதர்வா, யூடியூப் செனல்களில் பேட்டி அளித்து வருகிறார்,

அதர்வா நடித்துள்ள தனல் திரைப்படம், நாளை (செப்டம்பர் 12) வெளியாக உள்ளது. இந்த படம் தொடர்பான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் அதர்வா, யூடியூப் செனல்களில் பேட்டி அளித்து வருகிறார்,

author-image
WebDesk
New Update
tamil cinema Adharva

நடிகர் முரளியின் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்த நடிகர் அதர்வா தற்போது பல படங்களில் நடித்து வரும் நிலையில், இதயம் முரளி படத்தில் நடித்த அனுபவம், அந்த படத்தில் நடித்து வரும் பரிதாபங்கள் கோபி, சுதாகர், டிராவிட் ஆகியோரை பற்றி பேசியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருக்கும் அதர்வா, தனது நடிப்பில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். 2010-ம் ஆண்டு வெளியான பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்து, முப்பொழுதும் உன் கற்பனைகள், பாலாவின் பரதேசி, சண்டிவீரன், ஈட்டி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இடையில் இவர் நடித்த குருதி ஆட்டம், பட்டத்து அரசன் உள்ளிட்ட படங்கள் போதிய வரவேற்பை பெறாத நிலையில், சமீபத்தில் வெளியான டிஎன்ஏ திரைப்படம் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது தனல், இதயம் முரளி, அட்ரஸ், பராசக்தி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார், இதில் பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து வரும் நிலையில், ரவி மோகன் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார்.

இதனிடையே அதர்வா நடித்துள்ள தனல் திரைப்படம், நாளை (செப்டம்பர் 12) வெளியாக உள்ளது. இந்த படம் தொடர்பான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் அதர்வா, யூடியூப் செனல்களில் பேட்டி அளித்து வருகிறார், அந்த வகையில், கலாட்டா தமிழ் யூடியூப் சேனலில் அவர் அளித்த பேட்டியில், பரிதாபங்கள் சேனல் குறித்து பேசியுள்ளார். அதில் பேசிய அவர், இதயம் முரளி படத்திற்காக திருச்சியில் படப்பிடிப்பு நடத்தியது பெரிய அனுபவம் என்று கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

மேலும், திருச்சியில் இருக்கும் மக்கள், சமைத்து கொடுப்பது ரொம்ப பிடிக்கும். இப்போது இருக்கும் காலக்கட்டம், நாடோடிகள் படத்தில் வருவது போலத்தான் இருக்கிறது. நாம் நடித்துவிட்டு கேரவன் வந்து காஸ்டியூம் சேஞ்ச் தான் பண்ணியிருப்போம். ஆனால் அதற்குள், எனது வீடியோக்கள் வெளியாகி இருக்கும். அந்த சமயத்தில் நான் நடித்த காட்சியில் டாப் ஆங்கிள் ஷாட் நாங்கள் யோசிக்கவே இல்லை. ஆனால் இவர்கள் எடுத்திருக்கிறார்கள்.

பரிதாபங்கள் டீமே ஒரு வைபான டீம், சுதாகர், கோபி, டிராவிட், உள்ளிட்ட அந்த டீமுடன் சேரும்போது ஃபன்னாகத்தான் இருக்கிறது. அதேபோல் ரக்ஷன் ப்ரீத்தி என அனைவருமே நல்ல ஃபன்தான். கண்டிப்பான இதயம் முரளி ஒரு நல்ல படமாக இருக்கும் என்று கூறியுள்ளார். 

Tamil Cinema News Tamil Cinema Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: