தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக அஜித்குமார் தான் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே பாடகரும நடிகமான எஸ்.பி.பி சரணுடன் நெருங்கிய நட்பில் இருந்துள்ளார். இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்தபோது, சரண் ஆடைகளை அஜித் போட்டுக்கொண்டு விளம்பர படங்களுக்கு சென்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள முக்கிய நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். 1990-ம் ஆண்டு வெளியாக என் வீடு என் கணவர் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர், அடுத்து 1993-ம் ஆண்டு வெளியான அமராவதி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாக நாயகனாக வலம் வருகிறார்.
பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் என பலரின் கூட்டணியில் இணைந்து பல வெற்றிகளை குவித்த அஜித், நடிப்பு மட்டுமல்லாமல், கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கிச்சூடு என பல விளையாட்டுககளிலும் ஆர்வம் கொண்டவர். படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் பைக்கில் உலக சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் சமூகவலைதளங்களில் இல்லை என்றாலும், இவரது ஒவ்வொரு அப்டேட்டுக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் பல நடிகர்களுடன் நெருக்கமான நட்பபில் இருந்தாலும், நடிகரும் பாடகருமான எஸ்.பி.பி சரணுடன் அஜித் நெருக்கிய நட்பில் இருந்துள்ளார். இருவரும் ஒன்றாக படித்துள்ளனர். ஆரம்பத்தில், அஜித்தை தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன். அவரின் மகன் தான் எஸ்.பி.பி சரண். அஜித் – சரண் இருவரும் நெருங்கி நட்புடன் இந்த சமயத்தில், அஜித்துக்கு விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.
அந்த சமயத்தில் ஒரு செண்டிமெண்ட்க்காக, அஜித், எஸ்.பி.பி சரணின் உடைகளை அணிந்துகொண்டு தான் செல்வராம். பாடல் பாடும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“