ஒரு பயணம் பெரிய மாற்றத்தை செய்யும்: ஆனால் சாதி, மதம்? அஜித் பழைய வீடியோ வைரல்!

நடிப்பு மட்டுமல்லாமல், கார் மற்றும் பைக் ரேஸில் ஆர்வம் கொண்ட அஜித் அவ்வப்போது பைக் டூர் செல்வது வழக்கம்.

நடிப்பு மட்டுமல்லாமல், கார் மற்றும் பைக் ரேஸில் ஆர்வம் கொண்ட அஜித் அவ்வப்போது பைக் டூர் செல்வது வழக்கம்.

author-image
WebDesk
New Update
Ajith Kumar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த அஜித், பைக் மற்றும் கார் ரேஸ் செல்வதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கும் நிலையில், தற்போது அவர் பைக் ரேஸ் சென்றபோது பேசிய ஆடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வரும் அஜித் குமார், தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் லைகா தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. நடிப்பு மட்டுமல்லாமல், கார் மற்றும் பைக் ரேஸில் ஆர்வம் கொண்ட அஜித் அவ்வப்போது பைக் டூர் செல்வது வழக்கம்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் பைக் டூர் சென்றபோது, வெளியிட்டுள்ள ஆடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், ஒரு நபர் தன் வாழ்வில் மேற்கொள்ளும் பயணம், அவரை சிறந்த மனிதனாக மாற்றும். மதம் மனிதர்களை வெறுக்க வைக்கும். ஆனால் அவர்களை சந்தித்த பிறகு அந்த எண்ணம் மாறும். இதேபோல் மதம் மற்றும் இனத்தை வைத்து நாம் கணிப்பில் இருப்போம். ஆனால் அந்த மனிதர்களை சந்திக்கும்போது அவர்களின் உண்மை நிலை என்ன என்று நமக்கு புரியும்.

ஒவ்வொரு பயணமும் அங்குள்ள மக்களை பற்றி அறிந்துகொள்வது மட்டுமின்றி, அவர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, மத நல்லிணக்கம், ஆகியவற்றை பற்றி அறிந்துகொள்ள உதவும். ஒரு சாதாரண மனிதன் இந்த பயணம் மேற்கொள்ளும்போது அவர் சிறந்த மனிதனாக மாறும் வாய்ப்பு கிடைக்கும் என்று அஜித்குமார் கூறியுள்ளார். இந்த ஆடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Ajithkumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: