தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தனது நடிப்புத்திறமையால் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் அஜித். சமீபத்தில் வெளியான இவரின் துணிவு படம் பெரிய வெற்றியை கொடுத்த சந்தோஷத்தில் இருக்கும் அஜித் அடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் தனது 62-வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் அஜித் அவ்வப்போது தனது குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது குடும்பத்துடன் வெளிநாடு சென்ற புகைப்படங்களை அவரது மனைவியும் நடிகையுமான ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குழந்தைகளுடன் இருப்பது ஆன்மாவுக்கு மிகவும் சந்தோஷம் என்ற கேப்ஷனுடன் ஷாலினி பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில் பலரும் அஜித்தின் மகள் அவரின் மனைவியை விட உயரமாக வளர்ந்துவிட்டார் என்று கூறியுள்ளனர்.

கடந்த 2000-ம் ஆண்டு தன்னுடன் அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்த நடிகை ஷாலினியை அஜித் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“