scorecardresearch

படப் பிடிப்புக்கு நடுவே இங்கிலாந்து பறந்த அஜித்… காரணம் என்ன?

படப்பிடிப்பிற்கு மத்தியில் அஜித் இங்கிலாந்து பயணத்திற்கு புறப்பட்டார். அவரின் இந்த பயணங்கள் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

படப் பிடிப்புக்கு நடுவே இங்கிலாந்து பறந்த அஜித்… காரணம் என்ன?

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர்களில் முக்கியமானவர் அஜித். தொடர்ந்து ஒரே இயக்குநரின் இயக்கத்தில் நடிப்பதில் பெயர் பெற்ற அஜித், ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் 4 படங்களில் தொடர்ச்சியாக நடித்து வெற்றியை கொடுத்தார்.

தொடர்ந்து நேர்கொண்ட பார்வை படத்தில் இயக்குநர் எச.வினோத்துடன் இணைந்த அஜித் தொடர்ந்து வலிமை படத்திலும் அவருடன் பணியாற்றினார் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது 3-வது முறையாக அஜித் எச்.வினோத் கூட்டணி இணைந்துள்ளது.

இவர்கள் இருவரும் ஏற்கனவே இணைந்த 2 படங்களை தயாரித்த போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். இவர்கள் மூவரும் இணையும் 3-வது படமான இந்த படத்திற்கு தற்காலிகமாக ஏ.கே. 61 என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக வைத்து த்ரில்லர் பாணியில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில், படப்பிடிப்பிற்கு மத்தியில் அஜித் இங்கிலாந்து பயணத்திற்கு புறப்பட்டார். அவரின் இந்த பயணங்கள் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.  இந்த படத்தில் அஜித் புதிய தோற்றத்தில் நடிக்கவிருப்பதால், படத்தின் ஷூட்டிங் ஸ்கெடியூல் தொடங்கும் முன்பே இங்கிலாந்து பயணத்தை முடிக்க அஜித் திட்டமிட்டுள்ளார்.

மேலும், ஏகே 61′ படத்தில் அஜித் நாயகன் வில்லன் என இரட்டை வேடங்களில் நடிக்க இருப்தாக கூறப்படுகிறது. இதில் ஒரு கேரக்டரின் தோற்றம் சமீபகாலமாக இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த தோற்றம் படத்தில் இடம்பெற்றிருந்தாலும் படத்தின் க்ளைமேக்ஸில் அஜித் வேறு புதிய தோற்றத்திற்கு மாறிவிடுவார் என்றும். இந்த தொற்றம் தற்போதுவரை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் அஜீத் ஒரு தோற்றத்தில் குறைந்த முடி மற்றும் அடர்ந்த தாடியுடன் நடிக்க உள்ளதாகவும், மற்றொன்று முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏ.கே 61′ படத்தில் மஞ்சு வாரியர், வீரா, ஜான் கோக்கன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் ஏ.கே 61′ படத்தின் படப்பிடிப்பு ஜூலை இரண்டாம் பாதியில் புனேயில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actor ajith going to uk with ak 61 getup

Best of Express