Advertisment

பிரபல நடிகர்களுக்காக மட்டும் அஜித் ஓடிச் சென்று உதவியது சரியா? நெட்டிசன்ஸ் ரீயாக்ஷன்

எவ்வித சமூகபிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்காத நடிகர் அஜித், சக நடிகர்களுக்காக ஓடிசசென்று உதவியது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்

author-image
WebDesk
New Update
Ajith Vishnu Amir

அஜித் - விஷ்னு விஷால் - அமீர்கான்

சென்னையில் மழையினால் பாதிக்கப்பட்ட பலதரப்பட்ட மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள பாதுகாப்பான இடங்களை தேடி தஞ்சமடைந்த நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் அமீர்கானுக்கு மட்டும் நடிகர் அஜித் உதவி செய்தது தற்போது பெரும் விவாதமாக வெடித்துள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருந்தாலும், ரசிகர்கள் மன்றத்தை காலைத்த அஜித் தனது பெயரை முழுவமையாக அழைக்கும்படியும், பட்ட பெயர் வைத்து அழைக்க வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்து வருகிறார். ஆனாலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் தொடர்ந்து அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

அதே போல் எவ்வித பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காத அஜித், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு பேட்டி என எதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாமல் தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் எந்த சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்காதவர். இது குறித்து பலரும் அவருக்கு விமர்சனங்கள் கொடுத்து வந்தாலும், இதை கண்டுகொள்ளாத அஜித் தனது பணிகளை மட்டும் கவனித்து வருகிறார்.

இதனிடையே சென்னையில் கடந்த இரு தினங்களாக இடைவிடாது பெய்த மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கே அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்க்கும் நிலையில், இருக்கும் மக்களுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.

இதில் சென்னை காரப்பாக்கத்தில் தனது வீட்டில் தண்ணீர் புகுந்துவிட்டதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அதே பகுதியில் தனது அம்மாவின் மருத்துவத்திற்காக தங்கியிருந்த பாலிவுட் நடிகர் அமீர்கான் ஆகியோரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். தங்களை மீட்டதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விஷ்ணு விஷால் தங்களுக்கு கார் கொடுத்து உதவிய நடிகர் அஜித் குமாருக்கு நன்றி என்று கூறி அவருடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். 

இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அஜித்தின் செயலுக்கு கடும் விமர்சனங்களை கூறி வருகின்றனர். எவ்வித சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்காத அஜித், சென்னையில் பல பகுதிகளில் மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக அலைந்துகொண்டிருக்கும் நிலையில், சக நடிகர்களுக்காக மட்டும் நடிகர் அஜித் குமார் உதவி செய்வது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அஜித்தின் இந்த செயலை அவரது ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும், சமூக ஆர்வலர்களும், சாதாரண சினிமா ரசிகர்களும், சக நடிகர்களுக்காக உதவி செய்து என்ன பயன்? ஏழை மக்களுக்கு உதவுகள் என்று தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Ajith Vishnu Vishal Aamir Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment