/indian-express-tamil/media/media_files/8NR9MBssM3wab0KAyPlO.jpg)
கிரிக்கெட் வீரர் நடராஜன் - அஜித்குமார்
இந்திய கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் சன் ரைசஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளருமான நடராஜன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு நடிகர் அஜித்குமார் கேக் ஊட்டிவிடுவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மூலம் பிரபலமாகி, ஐ.பி.எல் தொடரில் சன் ரைசஸ் அணிக்காக விளையாடிய டி.நடராஜன், குறுகிய காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலமான வீரராக உருவெடுத்தவர். கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணிக்காக வலை பந்துவீச்சாரளாக இடம்பெற்றிருந்தார்.
இந்த தொடரில் இடம்பெற்றிருந்த முக்கிய வீரர் காயம் காரணமாக விலகியதை தொடர்ந்து. நடராஜனுக்கு ஆடும்வெலன் அணியில் வாய்ப்பு கிடைத்தது. ஐ.பி.எல் தொடரில் சன் ரைசஸ் அணிக்காக விளையாடி வரும் நடராஜன், யார்க்கர் பந்துவீச்சுவதில் திறமையான பந்துவீச்சாளராக வலம் வருகிறார். தற்போது ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் நடராஜன் இன்று (ஏப்ரல் 4) தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
பிறந்த நாளை முன்னிட்டு நேற்று இரவு நடராஜன் கேக் வெட்டி கொண்டாடியபோது, இந்த கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றுள்ளார். நடிகர் அஜித் நடராஜனுக்கு கேக் ஊட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியை பார்க்க, அஜித் மனைவி ஷாலினி, அவரின் இரு குழந்தைகள், அண்ணன் ரிச்சர்டு, தங்கை ஷாமிலி ஆகியோர் வந்திருந்தனர். இதில் ஷாலினியும் அவரின் குழந்தைகளும் சென்னை அணியின் டிஷர்ட் அணிந்திருந்தனர். மேலும் அஜித்தின் மகன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us