அஜித் நடிப்பில் தயாராகியுள்ள துணிவு படம் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Advertisment
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து எச்.வினோத், இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் துணிவு. உண்மை சம்பவத்தை அடிப்டையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மஞ்சுவாரியார் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இசையமைத்துள்ள துணிவு படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான 3 பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ந் தேதி வெளியாக உள்ளது. இதே படத்துடன் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள வாரிசு படம் வெளியாக உள்ளதால் இரு தரப்பு ரசிகர்களும் தீவிர ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கடந்த சில தினங்களாக வாரிசு துணிபு படங்களில் புதிய அப்டேட்கள் வெளியாகி வருகிறது. இதில் நேற்று துணிவு படத்தின் கேரக்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அப்டேட்டில் அஜித் கேரக்டரின் பெயர் மட்டும் சீக்ரெட்டாக வைக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
Advertisment
Advertisements
இதனிடையே ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் துணிவு படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. படம் தொடங்குபோதே வங்கிக்கொள்ளையை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாக நிலையில், அதை உறுதி செய்யும் விதமாக டிரெய்லர் முழுவதும் வங்கி கொள்ளை சம்பவங்களே ஆக்கிரமித்துள்ளன.
வலிமை படத்தில் ஸ்டிரிக்டான ஆபீசராக நடித்திருந்த அஜித் இந்த படத்தில் கலகலப்பாக நடித்துள்ளது டிரெய்லரில் தெரிய வருகிறது. மேலும் அஜித் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், டிரெய்லரில் ஒரு அஜித் மட்டுமே காண்பிக்கப்பட்டுள்ளார். இதனால் மற்றொரு கேரக்டர் இருக்குமா அல்லது ஒரு அஜித் தானா என்பது குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“