/indian-express-tamil/media/media_files/XmXySlKmaZ0j0UIUqTz8.jpg)
நடிகர் அஜித்
சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி விபத்தில் மரணமடைந்த நிலையில், அவரது மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித், அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றி துரைசாமி. 2021-ம் ஆண்டு விதார்த் நம்யா நபீசன் நடிப்பில் வெளியான என்றாவது ஒருநாள் என்ற படத்தை இயக்கிய இவர், விலங்குகள் மீது அதீத ஆர்வம் கொண்டவர். இதன் காரணமாக தனது நண்பருடன் இணைந்து, விலக்குகளை படம் பிடிப்பதற்காக இமாச்சலபிரதேசம் சென்றுள்ளார்.
அங்கு கடந்த பிப்ரவரி 4-ந் தேதி மாலை கசாங்நளா பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டப்பாட்டை இழந்த கார், சாலையை ஒட்டியுள்ள சட்லஜ் நதியில் வீழ்ந்தது. இதில் அவரது நண்பர் காயத்துடன் உயிர் தப்பிய நிலையில், வெற்றி துரைசாமி மாயமானார். அவரது உடல் கடந்த 9 நாட்களாக தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. நேற்று விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் வெற்றி துரைசாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
Ajith sir paying last respects to Vetri Duraisamy .
— Prashanth Rangaswamy (@itisprashanth) February 13, 2024
He is very close to vetri and has accompanied him in many travel ! pic.twitter.com/ZCHnz8si9d
அதன்பிறகு உடல் சென்னை கொண்டுவரப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்ற (பிப் 13) பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. வெற்றி துரைசாமியின் மரணத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் நேரில் சென்று தனது நண்பருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெற்றி துரைசாமியின் உடல் இன்று சென்னை கண்ணம்மா பேட்டியில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.