/indian-express-tamil/media/media_files/2025/01/12/ZNKdyskNS1eTT0y9KRdH.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்காலிகமாக நடிப்பில் இருந்து விலகி, கார் பந்தயத்தில் பங்கேற்கு வரும் நிலையில், போட்டியின் போது அஜித் மீண்டும் விபத்தில் சிக்கியுள்ளார்
தமிழ் சினிமாவில், அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள முக்கிய நகடிர்களில் ஒருவராக இருக்கும் அஜித் நடிப்பில் இந்த ஆண்டு விடா முயற்சி, குட் பேட் அக்லி என இரு படங்கள் வெளியானது. இதில் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான விடா முயற்சி திரைப்படம் வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது.
கடந்த ஏப்ரல் 10-ந் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், உலகளவில் இந்த படம் ரூ200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த அஜித், கார் பந்தயத்தில் பங்கேற்று வரும் நிலையில், குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து அஜித் தனது அடுத்த படத்தை இயக்கும் பொறுப்பையும், ஆதிக் ரவிச்சந்திரனுக்கே கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, கார் பந்தயத்தில் பங்கேற்று வரும் அஜித், பெல்ஜியம், ஸ்பா சர்க்யூட்டில் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெறும் இந்த பந்தயத்தில் அஜித் உட்பட 3 ஓட்டுநர்கள் காரை மாற்றி மாற்றி இயக்க உள்ளனர். இந்த போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்த அஜித், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, அவர் பயிற்சி செய்யும்போது கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் அஜித்துக்கு எந்த காயமும் இல்லை என்றாலும் காரின் முன்பகுதி சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
ஐரோப்பியன் கார் பந்தயத்தில் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்குமார்
— Niranjan kumar (@niranjan2428) April 19, 2025
நல்வாய்ப்பாய் காயம் எதுவும் ஏற்படாமல் தப்பினார்#AjithKumarRacing#GoodBadUglypic.twitter.com/Jk5hWf81sp
கார் பந்தயம் மட்டுமல்லாமல், தனது படங்களிலும் கார் ரேஸ் தொடர்பான காட்சிகளில் நடித்து அசத்தி வரும் அஜித், அவ்வப்போது இது போன்ற விபத்துக்களில் சிக்கி வருகிறார். விடா முயற்சி படத்தின் ஷூட்டிங்கின்போது கூட, ஆரவுடன் இவர் போன கார் விபத்தை சந்தித்த வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டது. அதேபோல், துபாய் கார் ரேஸின்போது பயிற்சியில் விபத்தை சந்தித்தால் ஒரு போட்டியில் அஜித் பங்கேற்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.