Advertisment
Presenting Partner
Desktop GIF

சென்னை வெள்ளத்தில் அமீர்கான், விஷ்ணு விஷால்: ஓடோடிச் சென்று நேரில் உதவிய அஜித்

சென்னை காரப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் தனது வீட்டை சுற்றி மழை வெள்ளம் சூழ்ந்துவிட்டதாக புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்

author-image
WebDesk
New Update
Ajith Vishnu Amir

அஜித் - அமீர்கான் - விஷ்ணு விஷால்

சென்னையில் மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பாலிவுட் நடிகர் அமீர்கான் ஆகியோர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் அவர்களை நேரில் சந்தித்த நடிகர் அஜித் நலம் விசாரித்துள்ளார்.

Advertisment

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு பெற்று மிக்ஜாம் புயலாக மாறியதை தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், பல பகுதிகளில் மழைநீர் வீட்டிற்குள் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மழை நீர் புகுந்ததால் வீட்டில் இருந்து வெளியேறிய பலரும் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ள நிலையில், உணவு மற்றும் அத்தியாவசிய தேவைக்காக மற்றவர்களின் உதவியை கூட பெற முடியாத நிலையில் தத்திளித்து வருகின்றனர். மக்களின் பசியை போக்கும் வகையில் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ள மக்களுக்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள் உணவுகளை வழங்கி வருகின்றனர். 

இதனிடையே சென்னை காரப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் தனது வீட்டை சுற்றி மழை வெள்ளம் சூழ்ந்துவிட்டதாக கூறி தனது வீட்டில் மொட்டை மாடியில் இருந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து உடனடியாக அப்பகுதிக்கு சென்ற தீயணைப்புத்துறையினர் விஷ்ணு விஷால் மற்றும் அங்கிருந்த பாலிவுட் நடிகர் அமீர்கான் ஆகியோரை மீட்டனர்.

பாதுகாப்பான இடத்திற்கு வந்த நடிகர் விஷ்ணு விஷால் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த பதிவுக்கு பதில் அளித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விஷ்ணு விஷாலுக்கு நன்றியும், நடிகர் அமீர்கானுக்கு பாராட்டும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வெள்ளத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட நடிகர் விஷ்ணு விஷால் அமீர்கான் ஆகிய இருவரையும் நடிகர் அஜித் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

தொடர்ந்து கமிட்டி மெம்பர்ஸ் வில்லாவுக்கு அமீர்கான், விஷ்ணு விஷால் இருவரும் செல்வதற்காக அஜித் கார் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இந்த சந்திப்பின்போது மூவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள விஷ்ணு விஷால், அஜித்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Actor Ajith Vishnu Vishal Aamir Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment