அஜித் படத்தின் பூஜை; டைட்டிலை பார்த்து முகம் சுழித்த ரஜினிகாந்த்: எந்த படம் தெரியுமா?

அமராவதி படம் தொடங்கி தற்போது ஆக்ஷன் ஹீரோவாக வலம் வரும் அஜித், பைக் ரேஸ், துப்பாக்கிசுடுதல், உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளிலும் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

அமராவதி படம் தொடங்கி தற்போது ஆக்ஷன் ஹீரோவாக வலம் வரும் அஜித், பைக் ரேஸ், துப்பாக்கிசுடுதல், உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளிலும் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
rajinikanth Ajith

திரையுலகில், எவ்வித பின்புலமும் இல்லாமல், வெற்றி பெற்ற நடிகரான ரஜினிகாந்த் தன்னைபோலவே வந்த அஜித்தின் பட தலைப்பை பார்த்துவிட்டு முகம் சுழுித்ததாக பிரபல சினிமா பத்திரிக்கையாளர் குரு சம்பத் குமார் கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் ரஜினிகாந்த். முன்னணி இயக்குனர்கள் முதல் இன்றைய இளம் இயக்குனர்கள் வரை பலருடன் இணைந்து பணியாற்றியுள்ள ரஜினிகாந்த் லோகேஷ் கனகாராஜ் இயக்கத்தில், நடித்த கூலி திரைப்படம் சுதந்திர தினத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த 4 நாட்களில் இந்த படம் ரூ400 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 படத்தை முடித்துள்ள ரஜினிகாந்த் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஜினிகாந்தை போல் எவ்வித சினிமா பின்புலமும் இல்லாமல், சினிமாவில் வெற்றிக்கொடியை நாட்டியவர் தான் அஜித். அமராவதி படம் தொடங்கி தற்போது ஆக்ஷன் ஹீரோவாக வலம் வரும் இவர், பைக் ரேஸ், துப்பாக்கிசுடுதல், உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளிலும் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இந்நிலையில், அஜித் படத்தின் பூஜை ஒன்றுக்கு சென்ற ரஜினிகாந்த், அந்த படத்தின் டைட்டிலை பார்த்து முகம் சுழித்தாக ரைட்டர் பத்திரிக்கையாளர் குரு சம்பத் குமார் கூறியுள்ளார். சிறகடிக்க ஆசை சீரியலுக்கு கதை எழுதி வரும் இவர், சாய் வித் சித்ரா நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் பேட்டி எடுத்திருக்கிறேன். கமல்ஹாசன், தனது அடுத்து ப்ராஜக்ட் உள்ளிட்ட பல தகவல்களை தனிப்பட்ட முறையில் சொல்வார். ஆனால் ரஜினிகாந்த் லிமட்டாகத்தான் பேசுவார்.

Advertisment
Advertisements

அதேபோல், ரஜினிகாந்திடம் பேட்டி கேட்கும்போது அடுத்த முறை என்று சொல்லிவிட்டால் அத்துடன் வந்துவிட வேண்டும். அதன்பிறகு அவரிடம் கேட்கவே கூடாது. ஒருமுறை பட பூஜை ஒன்றுக்கு சென்றிருந்தேன். நாங்கள் சென்றபோது அஜித் எங்களுடன் சேர்ந்துகொண்டார். பூஜை நடைபெறும் இடத்திற்கு சென்றவுடன் அங்கு சிறப்பு விருந்திராக பட்டு வேட்டி சட்டையில் ரஜினிகாந்த் வந்தார். எஙகளை பார்த்தவுடன் சிரித்த முடித்துடன் வரவேற்றார்.

அப்போது அவருக்கு விழா தொடர்பான நோட்டீஸ வழங்கப்பட்டது. அதை பார்த்த ரஜினிகாந்த் டைட்டில் பகைவன் என்று தெரிந்தவுடன், முகம் சுழித்தார். அவர் எப்போதும் நேர்மறையை எதிர்பார்ப்பவர். ஆனால், அந்த டைட்டில் பகைவன் என்று எதிர்மறையாக இருந்ததால், அவருக்கு பிடிக்கவலில்லை என்று குரு சம்பத் குமார் கூறியுள்ளார். 1997-ம் ஆண்டு வெளியான பகைவன் திரைப்பத்தில், சத்யராஜ், அஜித், கே.எஸ்.ரவிக்குமார், அஞ்சலா சவேரி, ரஞ்சிதா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவா இசையமைத்த இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. அஜித் சத்யராஜ் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth Actor Ajith

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: