scorecardresearch

ஆன்லைனில் கசிந்த துணிவு பட பாடல் : படக்குழுவினர், ரசிகர்கள் ஷாக்

அஜித்துடன் மஞ்சுவாரியார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள துணி படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது

ஆன்லைனில் கசிந்த துணிவு பட பாடல் : படக்குழுவினர், ரசிகர்கள் ஷாக்

அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள துணிவு படத்தின் பாடல் இணையத்தில் கசிந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேர்கொண்ட பார்வை, வலிமை என இரண்டு படங்களை தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத், நடிகர் அஜித், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் துணிவு. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், அஜித் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

மஞ்சுவாரியார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள துணி படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே பொங்கல் தினத்தில் விஜய் நடிப்பில் வாரிசு படமும் வெளியாக உள்ளதால் அஜித் விஜய் ரசிகர்கள் தங்களது நடிகர்களின் படங்களுக்காக இப்போதே ப்ரமோஷன் பணிகளை தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், ஜிப்ரான் இசையமைத்துள்ள துணிவு படத்தில் 3 பாடல்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இதில் சில்லா சில்லா என்ற பாடல் வரும் 9-ந் தேதி (நாளை) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அனிருத் பாடியுள்ள இந்த பாடல் வெளியீட்டுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது சில்லா சில்லா பாடல் ஆன்லைனில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் படக்குழுவினர் மட்டுமல்லாமல் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், பாடலை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்டது யார் என்பதை கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியான இந்த பாடலை யாரும் ஷேர் செய்ய வேண்டாம் என்று படக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actor ajith movie thunivu song leaked online