New Update
/indian-express-tamil/media/media_files/0iklTLX104oja4pDhdoB.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் 63-வது படமாக தயாராகி வரும் இந்த படம் அடுத்து ஆண்டு வெளியாக உள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நிறுவனமான இருக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கடந்த சில வாரங்களாக ஐதராபாத்தில் இந்த படத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இங்கு முக்கியமான சண்டைக்காட்சி மற்றும் பாடல்காட்சி ஒன்றும் படமாக்கப்பட உள்ளது.
மேலும் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து முடித்துள்ள விடா முயற்சி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை த்ரிஷா இந்த படத்திலும் அஜித்துடன் இணைந்துள்ளார். மேலும் பிரசன்னா உள்ளிட்ட பலரும் இந்த குட் பேட் அக்லி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் புதிய லுக் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
On the sets of #GoodBadUgly 💥🐉💥 pic.twitter.com/PM8Zjf3fYt
— Adhik Ravichandran (@Adhikravi) October 10, 2024
இது குறித்து பதிவிட்டுள்ள இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், குட் பேட் அக்லி படப்பிடிப்பில் என்று குறிப்பிட்டு, அஜித் கலர்ஃபுல்லான ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் சரஸ்வதி பூஜைக்கு தல தரிசனம் என்று கொண்டாடி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.