Actor Ajith Statement For Fans : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரும், தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை குவித்து வைத்துள்ளவர் நடிகர் அஜித். ஒரு பைக் மெக்கானிக்காக தனது வாழ்ககையை தொடங்கிய நடிகர் அஜித் பலகட்ட முயற்சிகளுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக உருவெடுத்துள்ளார். மேலும் எவ்வித சினிமா பின்புலமும் இல்லாமல் திறமையின் அடிப்படையிலேயே வெற்றிகளை குவித்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ள அஜித் தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவர் என்று சொல்லலாம்.
கடந்த 1993-ம் ஆண்டு அமராவதி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அஜித்குமார், தொடர்ந்து ஆசை, காதல்கோட்டை, தொடரும், வாலி, தீனா சிட்டசன், வில்லன், வீரம் என்னை அறிந்தால், விஸ்வாசம் நேர்கொண்ட பார்வை என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அந்த படத்தின் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை பாலிவுட் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார்.
பொதுவாக சமூக வலைதளங்களை பயன்படுத்தாத நடிகர் அஜித் ஏதாவது தவிர்க்க முடியாத அறிவிப்பை வெளியிடும்போது தனது பிஆர்ஓ மூலம் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது நடிகர் அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா நடிகர் அஜித்தின் சார்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
பெரும் மதிப்பிற்குரிய ஊடக பொதுஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு
இனி வரும் காலங்களில் என்னைப்பற்றி எழுதும் போதோ, என்னை குறிப்பிட்டு பேசும்போதோ என் இயற் பெயரான அஜித்குமார், மற்றும் அஜித், என்றோ அல்லது ஏ.கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.
தல என்றே வேறு ஏதாவது பட்ட பெயர்களையே குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.
உங்கள் அனைவரின் ஆரோக்கியம் உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்தகிறேன்.
அன்புடன்
அஜித்குமார்
என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்ளை கொண்ட நடிகர் என்று பெயர் பெற்றுள்ள நடிகர் அஜித், தீனா படத்தில் நடித்ததற்கு பிறகு அவரை ரசிகர்கள் அன்புடன் தல என்று அழைத்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது ரசிகர் மன்றங்களை கலைப்பதாக அறிவித்த நடிகர் அஜித்குமார், தனது பெயருக்கு முன்னாள் எந்த அழைமொழியும் பயன்படுத்த வேண்டாம் என்று கூறியிருந்தார்.
ஆனாலும் ரசிகர்கள் போஸ்டர் பேனர் என அனைத்திலும் அவரது பெயரை தல என்று கூறிப்பிட்டு வந்த நிலையில், தற்போது நடிகர் அஜித்தின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil