முன்னணி நடிகரான அஜித்குமார் தனது மகளின் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் சைக்கிள் டயர் ஓட்டிய வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிரான அஜித் குமார் நடிப்பில் பொங்கல் தினத்தை முன்னிட்ட துணிவு படம் வெளியாக உள்ளது. எச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படம் வரும் ஜனவரி 12-ந் தேதி வெளியாக உள்ளது.
ஏற்கனவே இந்த படத்தில் இருந்து 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருமத் நிலையில், கடந்த டிசம்பர் 31-ந் தேதி புத்தாண்டு விருந்தாக துணிவு படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள இந்த டிரெய்லர் பல சாதனைகளை படைத்து வருகிறது.
மேலும் விஜயின் வாரிசு படத்துக்கு போட்டியாக துணிவு வெளியாக உள்ளதால் இரு தரப்பு ரசிகர்களும் தீவிர ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே துணிவு படத்திற்கு ப்ரமோஷன் செய்யும் வகையில் அஜித் சைக்கிள் டயர் ஓட்டும் பழைய வீடியோ பதிவை அஜித் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
We love you Ajith sir, a little happiness. Thank you, Anshu.
— Ajith (@ajithFC) January 2, 2020
| #HBDAnoushkaAjith | Thala #Ajith | #Valimai | pic.twitter.com/jBxvOhfroL
விஸ்வாசம் படம் வெளியான சமயத்தில் தனது மகளின் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அஜித் குமார் மகளுடன் இணைந்து சைக்கிள் டயரை ஓட்டியுள்ளார். ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு சைக்கிள் டயரை உருட்டும் அஜித் சற்று தடுமாறியவுடன் அருகில் இருக்கும் அவரது மகள் சராமாரியாக சிரிக்கிறார். இந்த வீடியோ பதிவு அப்போதே பெரிய வைரலாக பரவியுள்ளது.
படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கிச்சூடு என பன்முக திறமைகளை வளர்த்து வரும் அஜித் குமார் பள்ளி நிகழ்ச்சியில் தனது மகளுடன் இணைந்து சைக்கிள் டயர் ஓட்டியது ரசிகர்கள் மத்தியில் பெரிய வைரலாக பரவியது. இதனிடையே தற்போது இந்த வீடியோ 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“