Advertisment

மாஸ் லுக்கில் அஜித்: மீண்டும் தொடங்கிய விடா முயற்சி: வைரல் போட்டோ!

லைகா நிறுவனம் தயாரித்து வரும் விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது.

author-image
WebDesk
New Update
Ajith Kumar

நடிகர் அஜித்குமார்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார், பைக் ரேஸ், கார் ரேஸ் மற்றும் துப்பாக்கிச்சுடுதல் போன்ற போட்டிகளில் ஆர்வம் கொண்டவராக இருக்கும் நிலையில், தற்போது அவர், கார் ரேஸ் ஒட்டுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் அஜித்குமார், கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் துணிவு என்ற வெற்றிப்படத்தை கொடுத்தார். அதன்பிறகு இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி என்ற படத்தில் நடிக்க தொடங்கினார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது.

அஜித்துடன், அர்ஜூன், த்ரிஷா, ஆரவ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், விடா முயற்சி படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இதனிடையே அஜித், சமீபத்தில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில். குட் பேட் அக்லி என்ற படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் வரவேற்பை பெற்றிருந்தாலும், சற்று விமர்சனங்களையும் சந்தித்தது. இதனிடையே தற்போது லைகா நிறுவனம், விடா முயற்சி படத்தை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், தற்போது அஜித் அந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளர். இதில் நடிகர் அரவ்வுடன் அவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதேபோல் தனியாக ரேஸ் பயிற்சி பள்ளி தொடங்கியுள்ள அஜித், கார் ஓட்டுவதற்காக தயாராகும் வீடியோ, மற்றும் கார் ஓட்டும் வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரேஸ் காரை ஓட்டிச்செல்லும் வீடியோவை பார்த்த அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டாடி வரும் நிலையில், பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment