சமீபத்தில் வெளியான அஜித்தின் விடா முயற்சி திரைப்படம், அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், பொதுவான ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் அஜித்குமார், கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் துணிவு என்ற வெற்றிப்படத்தை கொடுத்தார். அதன்பிறகு இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி என்ற படத்தில் நடிக்க தொடங்கினார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது.
அஜித்துடன், அர்ஜூன், த்ரிஷா, ஆரவ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த படம், தீபாவளி தினத்தில் வெளியிட லைகா நிறுவனம் முயற்சித்து வருவதாக தகவல் வெளியானது. தவிர்க்க முடியாத சில காரணங்களால், தீபாவளி தினத்தில் படம் வெளியாகவில்லை என்று கூறப்பட்டது. அதன்பிறகு ஒரு சில முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட இந்த படம் இறுதியாக கடந்த பிப்ரவரி 6-ந் தேதி வெளியானது.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான விடா முயற்சி திரைப்படம், கடுமையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அஜித் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தாலும், பொதுவான ரசிகர்களிடம், படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்ற விமர்சனமே வந்தது. இதனிடையே விடா முயற்சி திரைப்படத்தின் ஒடிடி ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி படம் வரும் மார்ச் 3-ந் தேதி நெட்ஃபிளக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் விடா முயற்சி திரைப்படம் வெளியாக உள்ளது என்று நெட்ஃபிளக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தொலைந்துபோன தனது மனைவியை தேடும் நபர் சந்திக்கும், சம்பவங்களை அப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட விடா முயற்சி திரைப்படம், ஆங்கிலத்தில் வெளியான பிரேக்டவுன் திரைப்படத்தின் தழுவல் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.