'நோ டைலாக், ஒன்லி ஆக்ஷன்: பொங்கல் ரேஸில் விடா முயற்சி; டீசர் வீடியோ வைரல்!

அஜித் நடிப்பில் தயாராகியுள்ள விடா முயற்சி திரைப்படம், பொங்கல் தினத்தில் வெளியாகும் என்ற அறிவிப்புடன் ஒரு டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அஜித் நடிப்பில் தயாராகியுள்ள விடா முயற்சி திரைப்படம், பொங்கல் தினத்தில் வெளியாகும் என்ற அறிவிப்புடன் ஒரு டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Vida Muyarchi Teaser

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடா முயற்சி திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ள படக்குழு அதற்கான டீசரையும் தற்போது வெளியிட்டுள்ளது,

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் அஜித்குமார், கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் துணிவு என்ற வெற்றிப்படத்தை கொடுத்தார். அதன்பிறகு இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி என்ற படத்தில் நடிக்க தொடங்கினார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது.

அஜித்துடன், அர்ஜூன், த்ரிஷா, ஆரவ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், விடா முயற்சி படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த சமயத்தில் அஜித், சமீபத்தில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில். குட் பேட் அக்லி என்ற படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இடையில் விடா முயற்சி படத்தை கையில் எடுத்த லைகா நிறுவனம் தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கிய சமயத்தில், அஜித் நடிகர் அரவ்வுடன் அவர் இருக்கும் புகைப்படம் வெளியானது.

Advertisment
Advertisements

இதனிடையே தற்போது அஜித்தின் விடா முயற்சி திரைப்படம், தீபாவளி தினத்தில் வெளியிட லைகா நிறுவனம் முயற்சித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், தீபாவளி தினத்தில் படம் வெளியாகவில்லை. இதனால் விடா முயற்சி படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்ட நிலையில், இன்று (நவம்பர் 28) திடீரென விடா முயற்சி படத்தின் டீசர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

வசனங்கள் இல்லாமல் முற்றிலும் ஆக்ஷன் கட்சிகளுடன் கட் செய்யப்பட்டுள்ள இந்த டீசர் முழுவதும் அஜித் மட்டுமே ஆக்கிரமித்துள்ளார். டீசரின் முடிவல், 2025 பொங்கல் தினத்தில் படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்  அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Actor Ajith

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: