New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/14/AW2IqxWuTuNxIi3uPw7X.jpg)
சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் அஜித் குமாரின் வந்த வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அவரது தோற்றத்தை பார்த்து வயப்பில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார், சமீபத்தில் சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது கம்பீரமான தோற்றமும், அமைதியான புன்னகையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், எளிமையான ஆனால் ஸ்டைலான உடையில் வந்த அஜித்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பாராட்டினர்.
இந்த நிகழ்வைக் காட்சிப்படுத்திய ஒரு வீடியோ கிளிப் உடனடியாக வைரலாக பரவியது.அந்தக் வீடியோவில், அஜித் தனது அணி மற்றும் பாதுகாப்பு ஊழியர்களுடன் அலுவலக வளாகத்திலிருந்து வெளியே வருவதைக் காணலாம். சுத்தமான வெள்ளை சட்டை, கச்சிதமான கருப்பு பேன்ட், கிளாசிக் பிளேசர் மற்றும் ஸ்போர்ட்டி ஸ்னீக்கர்களுடன், அவர் ஒரு தனித்துவமான அழகை வெளிப்படுத்தினார். வெளியே வந்ததும், காத்திருந்த ரசிகர்களையும் புகைப்படக் கலைஞர்களையும் தனது வழக்கமான அன்பான புன்னகையுடன் அஜித் வரவேற்றார்.
Superstar dengan drama sifar—Ajith Kumar dikesan di Pejabat Pasport Chennai, tiada rombongan, tiada kekecohan. Kelas murni dalam setiap pergerakan. 🙌🎥#AjithKumar #ThalaAjith #AKpic.twitter.com/g3mIxYzR6t
— Adi Boo (@ITSaDIp_olitics) June 13, 2025
ரசிகர்கள் பலரும் அவரை பார்த்தவுடன், "தல" மற்றும் "லெஜண்ட்" போன்ற குரல்கள், அஜித்தின் அரிதான பொது தோற்றத்தால் உற்சாகமடைந்தன. அவரது சினிமா வாழ்க்கையைப் பொறுத்தவரை, அஜித் தனது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அடுத்த படமான ஏ.கே.46-க்கு தயாராகி வருகிறார். சமீபத்தில், இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்னுலேக் (Indulge) உடனான ஒரு நேர்காணலில், தனது இரண்டு பேரார்வங்களான தொழில்முறை மோட்டார்ஸ்போர்ட் மற்றும் நடிப்பு இரண்டையும் எவ்வாறு சமன் செய்கிறார் என்பதைப் பற்றி பேசினார்.
#Ajithkumar's Latest Clip from Chennai Passport Office.. He's Maintaining His Looks Well now..💥🤝 pic.twitter.com/x7T72gCue0
— Cinemapatti (@cinemapatti) June 13, 2025
அதில், "ஒவ்வொரு ஜனவரியிலும் துபாயில் நடைபெறும் ஒரு முறை பந்தயத்தைத் தவிர, ஐரோப்பாவில் எங்கள் பந்தய சீசன் மார்ச் மாதத்தில் தொடங்கி அக்டோபரில் முடிவடைகிறது" என்று அவர் விளக்கினார். “நவம்பர் முதல் பிப்ரவரி மாதத்திற்குள் ஒரு திரைப்பட படப்பிடிப்பை நான் முடிக்க முடிந்தால், எனது பந்தய அட்டவணையில் தொடர்ந்து கவனம் செலுத்தும். அதே வேளையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு திரைப்படத்தை வெளியிட முடியும். நான் இந்த நவம்பரில் ஒரு புதிய படத்தைத் தொடங்குகிறேன், அதை 2026 ஏப்ரல் அல்லது மே மாதங்களில் வெளியிட முடியும் நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.
ஏ.கே. 46 குறித்த உற்சாகம் ஏற்கனவே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது, ரசிகர்கள் அதிகாரப்பூர்வ தகவலுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'குட் பேட் அக்லி' அஜித்தின் சமீபத்திய படமாகும். திட்டமிடப்பட்ட தனது அடுத்த படம் மற்றும் பொதுத் தோற்றங்கள் மூலம் கவனத்தை ஈர்த்து வரும் அஜித் குமார், திரையிலும் சரி, வெளியிலும் சரி, ஒரு தனித்துவமானவராகவே திகழ்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.