/indian-express-tamil/media/media_files/2025/05/19/GpzBabVQPeqowxiH9hzX.jpg)
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக திகழும் அஜித் குமார், ரசிகர்களிடையேயும் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். ஹிட், ஃபிளாப் என எந்தவிதமான படங்களை, தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்த ஆண்டு மட்டும் அஜித் நடிப்பில் 'விடாமுயற்சி' மற்றும் 'குட் பேட் அக்லி' என இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. இதில் 'விடியமுயற்சி' கலவையான விமர்சனங்களை பெற்றாலும், 'குட் பேட் அக்லி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி வாகை சூடியது. திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல், அஜித்துக்கு கார் பந்தயத்தின் மீதும் தீராத காதல் உண்டு. பல்வேறு நாடுகளிலும் நடைபெற்ற கார் பந்தயங்களில் அவர் தீவிரமாக பங்கேற்று வருகிறார்.
இந்த ஆர்வத்தின் காரணமாக பலமுறை காயமடைந்தும் உள்ளார். அவரது கலை மற்றும் விளையாட்டுத் துறையிலான பங்களிப்பிற்கு சமீபத்தில், இந்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண் அவருக்கு வழங்கப்பட்டது, இதற்கிடையில், அஜித் திரைப்படங்களில் இருந்து ஓய்வு பெறப்போவதாக சில செய்திகள் பரவின. ஆனால், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தனது அடுத்த படமான ஏகே 64-ன் படப்பிடிப்பு இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தனது இரு விருப்பங்களான சினிமா மற்றும் கார் பந்தயம் குறித்து பேசிய அஜித், இரண்டையும் ஒரே நேரத்தில் செய்வதால் இரண்டிற்கும் முழுமையான கவனம் செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக, கார் பந்தய சீசன் இருக்கும்போது திரைப்படங்களில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே, சமீபத்தில் அஜித்தின் தோற்றத்தில் வியக்கத்தக்க மாற்றம் ஏற்பட்டது. கார் பந்தயங்களில் தீவிரமாக பங்கேற்பதற்காக அவர் சுமார் 42 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். கார் பந்தய பயிற்சி செய்யும் அவரது புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பேசிய அஜித், பந்தயங்களில் பங்கேற்க உடல் தகுதியுடன் இருக்க வேண்டியது அவசியம் என்பதால், கடந்த 8 மாதங்களில் கடுமையான உணவு கட்டுப்பாடு, நீச்சல் மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் 42 கிலோ வரை குறைத்ததாக கூறினார். மேலும், தேநீர் மற்றும் காபி அருந்துவதையும் அவர் தவிர்த்துள்ளார். இந்த வயதிலும் அஜித்தின் இந்த அர்ப்பணிப்பும், முயற்சியும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.