சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்களுக்கு இடையிலான போட்டியை நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி தனது குழந்தைகளுடன் ரசித்து பார்த்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் 174 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியை கண்டு ரசிக்க, நடிகர் அஜித்தின் மனைவி நடிகை ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன் மைதானத்திற்கு வந்துள்ளார். இந்த புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். போட்டியை காண வந்த மூவருமோ சென்னை அணிக்கு ஆதரவு அளிக்கும் வகையில், மஞ்சள் நிற ஜெர்சி அணிந்து வந்திருந்தனர். மேலும் ஷாலினியின் தங்கை ஷாமிலி, அண்ணன் ரிச்சர்ட ஆகியோரும் போட்டியை பார்க்க வந்துள்ளனர்.
சமீபத்தில், அஜித் மற்றும் ஷாலினி இருவரும் தங்கள் திருமண ஆண்டு விழாவை முன்கூட்டியே கொண்டாடியதாக கூறப்படுகிறது. இந்த ஜோடி கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த நிகழ்வின்போது கைதட்டி அவர்களை நண்பர்கள் உற்சாகப்படுத்திய 'அமர்க்களம்' படத்தின் 'உன்னோடு வாழாத' என்ற சூப்பர்ஹிட் பாடல் பின்னணியில் ஒலித்தது.
இந்த ஆண்டு, ஏப்ரல் 24 அன்று, அவர்கள் திருமணத்தின் 25 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார்கள். தற்போது இயக்குனர் மகிழ் திருமேனியின் 'விடா முயற்சி' படத்தில் அஜித் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில், படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் 'குட் பேட் அக்லி' என்று படத்தில் அஜித் நடிக்க உள்ளார். இந்த படம் 2025 பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“