ஐரோப்பா கார் பந்தயம்: மீண்டும் காா் ரேஸில் களமிறங்கும் அஜித்; லோகோ வெளியீடு!

சமீபத்தில் கார் ரேஸிங் அணியை தொடங்கிய அஜித் தற்போது தனது அணியுடன் கார் ரேஸில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் கார் ரேஸிங் அணியை தொடங்கிய அஜித் தற்போது தனது அணியுடன் கார் ரேஸில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
ajith Car Racing

நடிப்பை கடந்து பல விளையாட்டுகளில் கவனம் செலுத்தும் நடிகர் அஜித், சமீபத்தில் கார் ரேஸ் அணியை தொடங்கிய நிலையில், தற்போது அவர் கார் ரேஸ் பந்தையத்தில் தனது அணியுடன் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கம் அஜித், தற்போது விடா முயற்சி, குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்கில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் லைகா நிறுவனம் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கியுள்ள விடா முயற்சி திரைப்படம் விரைவில் வெளியாகும் என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த படத்தில் த்ரிஷா அர்ஜூன் ஆகியோர் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

அதேபோல் மார்க் ஆண்டனி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கததில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலும் த்ரிஷா நாயகியாக நடித்து வரும் நிலையில், பிரசன்னா, தெலுங்கு நடிகா சுனில் ஆகியோர் முக்கிய கேரக்டரல் நடித்து வரகின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது.

நடிப்பை கடந்து, துப்பாக்கி சுடுதல், பைக் டூர் செல்லுதல், கார் ரேஸ் என விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட அஜித், அவ்வப்போது பைக் எடுத்துக்கொண்டு வேர்ல்டு டூர் கிளம்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த பயணத்தின் போது அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருவது வழக்கமான ஒன்று. இதனிடையே தற்போது ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தும் வகையில், அஜித் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

அதன்படி, சமீபத்தில் அஜித்குமார் ரேஸிங் என்ற புதிய கார் பந்தைய அணியை தொடங்கிய அஜித் ஐரோப்பாவில் நடைபெறும் 24 எச் கார் பந்தையத்தில் போர்ஷோ 992 ஜிடி3 கப் பிரிவில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது அஜித்குமார் ரேஸிங் அணிக்கான லோகோ வெளியாகியுள்ளது. இந்த ரேஸிங்கில் அணியில் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுனராக அஜித் செயல்படுவார் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது இந்த அணியில் அஜித்துடன் மேலும் 3 கார் ரேஸர்கள் இடம்பெற்றுள்ளனர். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Ajithkumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: