கார் ரேஸ் பந்தையத்தில் களமிறங்க உள்ளதாக அறிவித்த நடிகர் அஜித், கடந்த வாரம் தனது அணியின் லோகோவை வெளியிட்ட நிலையில், தற்போது அவர் கார் ரேஸில் பயன்படுத்த உள்ள கார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கம் அஜித், தற்போது விடா முயற்சி, குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்கில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் லைகா நிறுவனம் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கியுள்ள விடா முயற்சி திரைப்படம் விரைவில் வெளியாகும் என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த படத்தில் த்ரிஷா அர்ஜூன் ஆகியோர் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
அதேபோல் மார்க் ஆண்டனி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கததில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலும் த்ரிஷா நாயகியாக நடித்து வரும் நிலையில், பிரசன்னா, தெலுங்கு நடிகா சுனில் ஆகியோர் முக்கிய கேரக்டரல் நடித்து வரகின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது.
நடிப்பை கடந்து, துப்பாக்கி சுடுதல், பைக் டூர் செல்லுதல், கார் ரேஸ் என விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட அஜித், அவ்வப்போது பைக் எடுத்துக்கொண்டு வேர்ல்டு டூர் கிளம்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில், ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில், கார் ரேஸிங் என்ற புதிய கார் பந்தைய அணியை தொடங்கிய அஜித் ஐரோப்பாவில் நடைபெறும் 24 எச் கார் பந்தையத்தில் போர்ஷோ 992 ஜிடி3 கப் பிரிவில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கார் ரேஸில் பங்கேற்க உள்ள அஜித், போர்ஸ்சி ஜி.டி3 ரக காரை சோதனை செய்துள்ளார். இந்த காரில் கீரை கொஞ்சம் மாற்றி போட்டால், உடனடியாக கார் பறக்கும் வகையில் ஸ்பீடாக போகும் என்று கூறப்படுகிறது. அஜித் இந்த காரை பரிசோதனை செய்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“