பாஷா படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகர் ஆனந்தராஜ் பகிர்ந்துள்ள வீடியோ பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1995-ம் ஆண்டு வெளியான படம் பாட்சா. நக்மா நாயகியாக நடித்திருந்த இந்த படத்தில் ரகுவரன், விஜயகுமார், ஜனகராஜ், சரண்ராஜ், உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். தேவா இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் பாட்சா இன்றளவும் பேசப்படும் ஒரு படமாக உள்ளது.
இந்த படத்தின் இடைவேளைக்கு முன்புவரை வில்லனாக நடித்தவர் ஆனந்தராஜ். ரஜினிகாந்த் வசிக்கும் ஏரியாவின் பெரிய தாதாவாக வலம் வரும் ஆனந்தாஜ் இந்திரன் என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்திருப்பார். மேலும் அவருக்கும் ரஜினிகாந்துக்கும் இடையே ஒரு பெரிய சண்டைக்காட்சி உள்ளது. இதுவே இந்த படத்தின் இடைவேளைக்காட்சி. ஆனால் அதற்கு முன்பாக ரஜினிகாந்தை கம்பத்தில் கட்டிவைத்து ஆனந்தராஜ் அடித்துவிடுவார்.
அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கும் மாணிக்கம் மாணிக் பாட்சாவாக மாறும் இந்த சீசன் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்த காட்சியில் நடிக்க பல நடிகர்களை பரிசீரித்தும் இறுதியில் ஆனந்தராஜ் தேர்வாகியுள்ளார். இந்த படத்தில் நடித்தது குறித்து நடிகர் ஆனந்தராஜ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஒருநாள் ரஜினிகாந்த் சாரிடம் இருந்து அழைப்பு வந்தது. நான் வேறொரு ஷூட்டிங்கில் இருந்ததால், பிரேக் டைமில் வருவதாக சொல்லிவிட்டு மதியம் லஞ்ச் பிரேக்கில் சென்றேன். ஆனால் படத்தில் ரகுவரன் சரண்ராஜ் எல்லாலும் இருக்காங்க இதுல நம்மல எதுக்கு வர சொல்லிருக்காங்கனு யோசிக்சேன். அதன்பிறகு ரஜினி சாரை சந்தித்து பேசினேன்.

அப்போது நீங்கள் இந்த படத்தில் நடிக்கிறீங்க என்று சொன்னார். படம் முழுவதும் முடிந்துவிட்டது. இன்னும் ஒருவாரம் தான் ஷூட்டிங் பாக்கி இதுல நான் என்ன நடிக்கிறது என்று கேட்டேன. அதற்கு ரஜினிசார் என்னை கட்டி வைத்து அடிக்க வேண்டும் என்று சொன்னார். அப்போதே எனக்கு பயம் வந்துவிட்டது. இது எப்படி சார் முடியும் ஜனங்க ஏத்துக்குவாங்களா என்று கேட்டேன். அதற்கு அவர் ஏத்துக்க மாட்டாங்கதான் ஆனால் நீங்க பண்ணா ஏத்துக்குவாங்க என்று சொன்னார்.
உடனே அவர் காலில் விழுந்துவிட்டேன் கண்டிப்பா நன் பண்றேன் சார் என்று சொன்னேன் ஷூட்டிங் நல்லபடியாக முடிஞ்சது. ஒருநாள் ஷூ்டிங்கில் ரஜினி சாருக்கு ஷூட் முடிஞ்சி அவர் கௌம்பிட்டார். அதன்பிறகு எனக்கான காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது ஜெயிலில் இருந்து வெளியே வந்து ரஜினிசார் வீட்டு முன்பு டைலாக் பேச வேண்டும். அப்போது ஜெயில் நமக்கு மாமியார் வீடு மாதிரி 3 நாள்ல மாலை மரியாதை எல்லாம் பண்ணி அனுப்பிட்டாங்க.
நான் வெளியில வந்துட்டேன் இனிமே உன் வீட்ல யார் இருப்பாங்க தெரியுமா வணக்கம்மோ என்று கையை தூக்கி வணக்கம் வைத்தவுடன் பின்னால் இருந்து வாவ் என்று ஒரு சத்தம் திரும்பி பார்த்த ரஜினி சார் அவ்ளோ ரசிச்சி பார்த்துக்கிட்டு இருந்தார். நீங்க இன்னும் போகலயா உங்க ஷாட் முடிஞ்சிடுச்சே என்று கேட்டேன். இல்ல இந்த சீன் நான் பார்த்தே ஆக வேண்டும் என்று சொல்லி பார்த்தார் என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“