நீங்க பிச்சை எடுக்க போறீங்க, கண்டிப்பா நடக்கும்; முதல்வர் எம்.ஜி.ஆரிடம் சொன்ன ஜோதிடர்: பிச்சை எடுத்தாரா?

சினிமா, அரசியல் என இரண்டிலும் முத்திரை பதித்தாலும், எம்.ஜி.ஆர் ஜோதிடத்தின் மீது அபார நம்பிக்கையுடன் இருந்துள்ளார். 

சினிமா, அரசியல் என இரண்டிலும் முத்திரை பதித்தாலும், எம்.ஜி.ஆர் ஜோதிடத்தின் மீது அபார நம்பிக்கையுடன் இருந்துள்ளார். 

author-image
WebDesk
New Update
MGR Engal1

தமிழ் சினிமாவிலும அரசியலிலும் தனக்கென தனி முத்திரை பதித்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஜோதிடத்தின் மீது அபார நம்பிக்கை கொண்டவராக இருந்துள்ளார். இந்த ஜோதிடத்தினால் அவர் பிச்சை எடுக்கும் நிலைக்கும் வந்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடம் பிடித்து 3-முறை முதல்வர் இருக்கையில் அமர்ந்தவர் எம்.ஜி.ஆர். சிறுவயதில் ஒரு நாடக நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கிய எம்.ஜி.ஆர், அதன்பிறகு, சதிலீலாவதி என்ற படத்தில் காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் சிறிய மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்த இவர், 10 வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக உருவெடுத்தார்.

தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்த எம்.ஜி.ஆருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லை.அதே சமயம் மனம் தளராத எம்.ஜி.ஆர் நாடோடி மன்னன் என்ற படத்தை இயக்கிய தயாரித்து நடித்து வெற்றி கண்டார். அதன்பிறகு பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்த எம்.ஜி.ஆர், அரசியலில் தடம்பதித்து முதல்வராக அமர்ந்தார். அதேபோல் சினிமா, அரசியல் என இரண்டிலும் முத்திரை பதித்தாலும், எம்.ஜி.ஆர் ஜோதிடத்தின் மீது அபார நம்பிக்கையுடன் இருந்துள்ளார். 

ஒருமுறை, கோவையை சேர்ந்த நாடி ஜோதிடர் சுப்பிரமணி என்பவர் எம்.ஜி.ஆரை சந்தித்துள்ளார், அப்போது எம்.ஜி.ஆர் என்ன சொல்லுது நாடி என்று கேட்டபோது உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் என்று சொல்ல, அப்படியா சரி இது எப்போது நடக்கும் என்று எம்.ஜி.ஆர் கேட்டுள்ளார். அதற்கு ஜோதிடர் சுப்பிரமணி, இன்னும் 5-6 மாதங்களில் நடக்கும் அண்ணா, ஆனால அதன்பிறகு என்ற இழுத்துள்ளார். இதை கேட்ட எம்.ஜி.ஆர் என்ன இறந்துவிடுவேனா என்று கேட்டுள்ளார்.

Advertisment
Advertisements

எம்.ஜி.ஆரின் வார்த்தையை கேட்ட ஜோதிடர் சுப்பிரமணி, உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை அண்ணா, ஆனா என்ற மீண்டும் இழுக்க, என்ன என்று சொல்லுங்கள் என்ற எம்.ஜி.ஆர் கூறியுள்ளார், அப்போது அவர் நீங்கள் பிச்சை எடுக்கும் நிலை வரும் என்று ஜோதிடம் சொல்கிறது என்று கூறியுள்ளார். இதை கேட்ட எம்.ஜி.ஆரின் அருகில் இருந்தவர்கள அவரை திட்ட, எம்.ஜி.ஆர் அவர்களை வெளியில் அனுப்பிவிட்டு, பிச்சை எடுப்பேனா, சரி அங்கிருந்து தானே வந்தோம் பாத்துக்கலாம் என்று கூறியுள்ளார். அவர் சொன்னபடி, 5-6 மாதங்களில் எம்.ஜி.ஆர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒளிவிளக்கு படத்தில் வருவது போல் எம்.ஜி.ஆர் ஹாஸ்பிட்டலில் இருக்க, அவர் உயிர் பிழைத்து வர வேண்டும் என்ற கூறி இந்து, முஸ்லிம், கிறிஸ்டின் வேண்டுவார்கள். கடைசியில் ஒரு அம்மா இறந்தவுடன் எம்.ஜி.ஆர் உயிர் பிழைத்து வருவார். அதேபோல் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபோது, பிரதமர் இந்திரா காந்தி இறந்து எம்.ஜி.ஆர் உயிர்பிழைத்து வருவார். அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும், எதிர்கட்சியினர் மக்கள் வரிப்பணத்தை இப்படி செலவு செய்யலாமா? ஒரு அளவு இல்லையா என்று விமர்சனம் செய்துள்ளனர்.

இந்த விமர்சனங்களை கேட்டு கோபப்ப்ட எம்.ஜி.ஆர் என் மருத்துவ செலவுக்கான பணத்தை மக்களே கொடுப்பார்கள் என்று சொல்லி தலைமை செயலகத்தில் சேர் போட்டு அமர்ந்து நிதி வசூல் செய்துள்ளார். அப்போது மக்கள் ரூ100, ரூ50 என தங்களால் முடிந்த பணத்தை நிதியுதவியாக அளித்துள்ளனர். இதனால் வசூலான பல லட்ச ரூபாயை தனது மருத்துவ செலவின் கடனாக அடைத்துள்ளார் எம்.ஜி.ஆர். ஜோதிடத்தில் சொன்னது போல் நடந்துவிட்டது என்று இயக்குனர் விஜயராஜ் யூடியூப் சேனல் ஒன்றில் கூறியுள்ளார். 

Mgr Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: