/indian-express-tamil/media/media_files/2025/06/07/Z3GyvvIW8aProfDtpcAy.jpg)
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இயக்குனர் சேரனுக்கு ஜோடியாக நடிக்க வந்த நடிகை ஒருவர், இவர் தான் ஹீரோவா, நான் அஜித்க்கு ஜோடியாக நடிக்க வந்தேன் என்று அவர் முன்பே கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவியாளராக இருந்த சேரன், 1997-ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிகுமானார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்ததை தொடர்ந்து அடுத்து, பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டிவர் பூமி உள்ளிட்ட தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தவர் சேரன். இதில், வெளிநாடு செல்வதற்காக பணம் கட்டி ஏமாற்றம் அடைந்தவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்த வெற்றிக்கொடி கட்டு பலரின் பாராட்டுக்களை பெற்றது.
அதேபோல், கூட்’டு குடும்பத்தின் அவசியத்தை வலியுறுத்தும் பாண்டவர் பூமி, சாதி கடந்த காதலை மையப்படுத்திய பாரதி கண்ணம்மா, மாற்றுத்திறனாளி பெண்ணின் வாழ்வியலை சொல்லும் பொற்காலம் என சேரன் இயக்கிய அனைத்து படங்களிலும் ஏதாவது ஒரு வகையில், சமூகத்திற்கு கருத்துக்களை வலியுறுத்தும் படமாக அமைந்தது. அதேபோல நடிகராகவும் பல வெற்றிப்படங்களை கொடுத்த சேரன், புரியாத புதிர், சேரன் பாண்டியன், இந்திரன் சந்திரன் ஆகிய படங்களில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
2002-ம் ஆண்டு வெளியான சொல்ல மறந்த கதை படம் தான் சேரன் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம். வீட்டோட மாப்பிள்ளை சந்திக்கும் முக்கிய பிரச்னைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தை இயக்குனரும் ஒளிப்பதிவாளருமாக தங்கர் பச்சான் இயக்கியிருந்தார். சேரனுடன் மணிவண்ணன், பிரமீட் நடராஜன், புஷ்பவனம் குப்புசாமி, யுவராணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்தில் நாயகியாக ரதி என்பவர் நடித்திருந்தார்.
2002-ம் ஆண்டு வெளியான எங்கே எனது கவிதை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக ரதி, நடித்த 2-வது படம் சொல்ல மறந்த கதை. இந்த படத்தின் படப்பிடிப்புக்காக முதல் நாள் வந்த ரதி, சேரனை பார்த்து, இவர்தான் ஹீரோவாக நான் அஜித்துடன் தான் நடிக்க வந்தேன் என்று கூறியுள்ளார். இதை கேட்ட சேரன், இல்லமா தலைவிதி நீ என்னோட தான் நடிக்க வேண்டும் என்று சிரித்துக்கொண்டே கூறியுள்ளார். இப்படி ஆரம்பித்த இந்த படம், 65 நாட்கள் ஷூட்டிங் முடித்துவிட்டு, வீட்டுக்கு போகும்போது நான் சேரனாக இல்லை.
எனது மூளையில் சிவதானுதான் இருக்கிறான். என் மனைவி குழந்தைகள் சேரன் எங்கே என்று தேடுகிறார்கள். அந்த அளவிற்கு அந்த கேரக்டருக்கு உள்ளே சென்றுவிட்டேன். சிவதானு பார்வதி குழந்தை இவற்றில் இருந்து வெளியில் வர நான் மிகவும் கஷ்டப்பட்டேன் என்று சேரன் கூறியுள்ளார். சேரன் முதன் முதலில் மலையாளத்தில் அறிமுகமாகியுள்ள நரிவேட்டை என்ற படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் இது பற்றி கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.