தமிழ் சினிமாவில், நடிகராகவும் இயக்குனராகவும், அரசியல் கருத்துக்களை அழுத்தமாக சொன்ன மணிவண்ணன், தனது உதவி இயக்குனரை முதல் நாளில் கெட்ட வார்த்தையில் திட்டி சாணி அல்ல வைத்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர்.சி. 1990-ம் ஆண்டு மணிவண்ணன் இயக்கிய வாழக்கை சக்கரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான இவர், இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக வேலை செய்துள்ளார். 5 வருடங்களுக்கு பிறகு 1995-ம் ஆண்டு வெளியான முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
முதல் படமே சுந்தர்.சி-க்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்ததை தொடர்ந்து, உள்ளத்தை அள்ளித்தா, உனக்கான எல்லாம் உனக்காக, மேட்டுக்குடி, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில் அருணாச்சலம், கமல்ஹாசன் நடிப்பில் அன்பே சிவம் உள்ளிட்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களில் வரிசையில் இடம் பிடித்துள்ளார்.
90-களின் நடுவில் இயக்குனராக அறிமுகமானி தற்போதுவரை படங்கள் இயக்கும் ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர் சுந்தர்.சி. சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படத்தில் ஹீரோவாகவும் நடித்து அசத்திய சுந்தர்.சி பெரிய வெற்றிப்படத்தை கொடுத்துள்ளார். நடப்பு ஆண்டில் இதுவரை அதிக வசூல் செய்த படங்களில் வரிசையில் அரண்மனை 4 படம் முன்னணியில் இருக்கிறது. அடுத்து சுந்தர்.சி கலகலப்பு படத்தின் 3-ம் பாகத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையெ அரண்மனை படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சுந்தர்.சி, உதவி இயக்குனராக தனது முதல்நாள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். முதல்நாள் படப்பிடிப்பு பொள்ளாச்சி ஆணைமலை பக்கத்தில் நடைபெற்றது. சத்யராஜ் சார் பைக்கில் வருவது போன்ற காட்சி, கேமராவை நடு ரோட்டில் வைத்துவிட்டார்கள். கேமராவுக்கு முன்பாக சாணி இருந்தது. அப்போது மணிவண்ணன் சார், சாணி அள்ளு என்று சொன்னார். நான் உதவி இயக்குனர் வேறு ஒருவரிடம் ஏய் இந்த சாணியை அள்ளு என்று சொன்னேன்.
இதை பார்த்த மணிவண்ணன் சார், சொல்லமுடியாத ஒரு கெட்டவார்த்தையில் திட்டி, ஏன் நீ அள்ளமாட்டியா? மேலும் ஒரு கெட்டவார்த்தையில் திட்டி இதுக்குதான் வந்தியா? என்று கேட்டார். நான் கோயம்புத்தூரில் வசதியான வீட்டு பையன் நான் எப்படி சாணி அள்ளுவது என்று யோசித்தாலும் அப்போது அள்ளினேன். அப்போ சாணி அள்ளியது இப்போ வரைக்கும் எனக்கு பயன்படுகிறது. நாம் முன்னுக்கு வர வேண்டும் என்றால் எதையும் செய்ய யோசிக்க கூடாது என்பதை தெரிந்துகொண்டேன் என் சுந்தர்.சி கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“