கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், இன்று, (டிசம்பர் 28) நிமோனியா காரணமாக தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் பிறந்த விஜயகாந்த் இயற்பெயர் நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி. அவருக்கு தற்போது 71 வயதாகிறது. 1979-ம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
பல வெற்றிப்படங்களை கொடுத்த விஜயகாந்த், கருணாநிதி, ஜெயலலிதா என இரு ஆளுமைகள் இருக்கும்போதே, தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற அரசியல் கட்சை தொடங்கினார்.
தனது திரை வாழ்க்கையில் 154 படங்களில் நடித்துள்ள விஜயகாந்த், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சிறந்த ஆளுமை கொண்ட நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
1991-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் 100வது படமான 'கேப்டன் பிரபாகரன்' மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படம் 200 நாட்களுக்கு மேல் ஓடியது, அதற்குப் பிறகு அவருக்கு "கேப்டன்" என்ற பெயர் கிடைத்தது.
பிற மொழி படங்களில் நடிக்காத ஒரே நடிகர் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் வலம் வந்த விஜயகாந்த், படங்கள் பெரும்பாலும் தெலுங்கு மற்றும் இந்தியில் டப்பிங் மற்றும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது செய்யப்பட்டுள்ளன.
1990கள் முழுவதும் விஜயகாந்த் புலன் விசாரணை உட்பட ஆக்ஷன் ஹீரோவாக பல படங்களில் நடித்திருந்த விஜயகாந்த், பல்துறை நடிப்பில் சிறந்து விளங்கினார்.
விஜயகாந்த் ஜனவரி 31, 1990 இல் பிரேமலதாவை மணந்தார், அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மகன் சண்முக பாண்டியன் சகாப்தம் (2015) மற்றும் மதுர வீரன் (2018) ஆகிய படங்களில் நடித்தவர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.