தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தவிர்க்க முடியாத அடையாளமாக திகழ்ந்து வரும் எம்.ஜி.ஆர். பத்திரிக்கையாளர்களிடம் எப்படி நடந்துகொண்டார் என்பது குறித்து இதயக்கனி டிவி யூடியூப் சேனல் ஒன்றில் வெளியாகியுள்ள வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பெற்றிருப்பவர் எம்.ஜி.ஆர். 1917-ம் ஆண்டு இலங்கையில் பிறந்த இவர், 1936-ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் கேரக்டர் நடிகராக நடித்து பிறகு நாயகனாக உயர்ந்த எம்.ஜிஆர்.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக வளர்ந்தார்.
நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கம் தயாரிப்பு என பன்முக திறமைகளை வளர்த்துக்கொண்ட எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆரின் புகழ் காலத்தால் அழியாதது என்பதற்கு பல சான்றுகள் உள்ளது. இன்றைய அரசியல்வாதிகள் திரைத்துறையினர் கூட தங்களது மேடை பேச்சுகளில் எம்.ஜி.ஆர். பற்றி பேசாமல் இருந்ததில்லை என்று சொல்லலாம்.
இப்படி பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான எம்.ஜி.ஆர் தவறு செய்யும் பலரையும் தனது இல்லத்திற்கு அழைத்து வந்து அடித்துவிடுவார் என்ற தகவல் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை என்றாலும் பல யூடியூப் சேனல்களில் இது தொடர்பான பதிவுகள் இதற்கு முன்பு வெளியானது. தற்போதும் கூட வெளியாகி வருகிறது.
மேலும் எம்.ஜி.ஆர். பத்திரிக்கையாளர்களிடம் கடுமையாக நடந்துகொண்டார் என்று கூறப்படுகிறது. தற்போது இது தொடர்பாக விளக்கம் அளித்து ஒருவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு வைரலாகி வருகிறது. பத்திரிக்கையாளர்களை எம்.ஜி.ஆர் அடித்தாரா? எம்.ஜி.ஆர் அவரை அடித்தார் இவரை அடித்தார் என பல கட்டுக்கதைகள் வந்துகொண்டிருக்கிறது.
ஆனால் தனக்கு எதிராக துரோகம் செய்தவர்களை மட்டும் எம்.ஜி.ஆர் கண்டித்துள்ளார். இதில் இரண்டு பத்திரிக்கையாளர்கள் முக்கியமானவர்கள். அதில் ஒரு பத்திரிக்கையாளர் எம்.ஜி.ஆரை எப்போதும் விமர்சனம் செய்து எழுதிக்கொண்டிருப்பார். எம்.ஜி.ஆரை திட்டிக்கொண்டே இருப்பார். ஆனால் எம்.ஜி.ஆருடன் நட்பாகத்தான் இருந்தார். அவரது படங்கள் ப்ரீவியூ ஷோ வரும்போது அவருக்கு அழைப்பு வரும் வந்து பார்த்துவிட்டு மோசம் என்று விமர்சனம் செய்வார். ஆனால் அதை எம்.ஜி.ர் பொருட்படுத்தியதில்லை.
இப்படி இருக்கும் போது எம்.ஜி.ஆருக்கு பாரத் விருது கொடுத்தபோது அவரை பாராட்டி ஒரு நிகழ்ச்சி ஒன்று நடத்த வேண்டும் என்று அந்த பத்திரிக்கையாளர் எம்.ஜி.ஆரை சந்தித்தார். அப்போது நிகழ்ச்சிக்கு சம்மதம் தெரிவித்த எம்.ஜி.ஆர் அதற்கு முன்பணம் கொடுத்து அனுப்பினார். பத்திரக்கையாளர்கள் ஏற்கனவெ கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்பது தெரிந்து எம்.ஜி.ஆர் நிகழ்ச்சிக்கான பணத்தை கொடுத்தார்.
அதன்பிறகு நிகழ்ச்சி நல்லபடியாக முடிந்தது. இந்த பத்திரிக்கயைாளர் அதை அப்படியே விட்டிருக்கலாம். ஆனால் நிகழ்ச்சிக்கு ஆன செலவுகள் குறித்து கணக்கு காண்பிக்கிறேன் என்று சொல்லி தேவையில்லாமல் போய் மாட்டிக்கொண்டார். நிகழ்ச்சிக்கு அந்த பத்திரிக்கையாளர் செய்த செலவுகள் அத்தனையும் எம்.ஜி.ஆர்-க்கு தெரியும். அவர் கொடுத்த பணத்தில் மீதி பணம் இருக்கிறது என்பதும் தெரியும்.
ஆனால் இது தெரியாத அந்த பத்திரிக்கையாளர் எம்.ஜி.ஆரிடம் வந்து கணக்கு காண்பித்து மேலும் பணம் எதிர்பார்த்துள்ளார். இதை கேட்ட எம்.ஜி.ஆர் கோபமாகி, லைசண்டாக மேக்கப் ரூமில் வைத்து அடி பின்னி எடுத்தவிட்டார். உங்கள் தேவைகள் எனக்கு தெரியும் இருந்தாலும் அதை கேட்டு பெற்றிருக்கலாம். ஆனால் தப்பா பொய் சொல்லி ஏமாற்றலாம் என்று நினைத்த போதுதான் எனக்கு கோபம் வருது என்று சொல்லி அனுப்பியுள்ளார்.
அதேபோல் தொடங்கப்பட்டது முதல் நடுநிலையாக வந்துகொண்டிருந்த ஃபிலிமாலயா பத்திரிக்கை காலப்போக்கில் நிர்வாகங்கள் மாறும்போது எம்.ஜி.ஆருக்கு எதிரான நிலைபாட்டை எடுத்தனர். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் எம்.ஜி.ஆர் ஒரு நடிகையை டெஸ்ட் ஷூட் எடுக்கும்போது அந்த நடிகையின் ஆடையை முட்டிக்கால் உயரம் தூக்கி நடந்து வருமாறு கூறியதாக செய்திகள் வெளியானது.
இந்த செய்தியை பார்த்த எம்.ஜி.ஆர் கடுமையாக கோபமடைந்தார். ஆனாலும் அப்போது தனது கோபத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்த எம்.ஜி.ஆர் சில மாதங்களுக்கு பிறகு அந்த பத்திரிக்கையாளரை அழைத்து வந்து தனது மேக்கப் ரூமில் வைத்து அடித்து பின்னி எடுத்துவிட்டார். அதில் இருந்து அந்த பத்திரிக்கையில் எம்.ஜி.ஆர் குறித்து எந்த அவதூறு செய்திகளும் வருவதில்லை என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.