Advertisment

MGR Flashback: எம்.ஜி.ஆர் உயிரையே வைத்திருந்த முதல் மனைவி பார்கவி; ஆவியுடன் பேச நடந்த முயற்சி

நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கம் தயாரிப்பு என பன்முக திறமைகளை வளர்த்துக்கொண்ட எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆரின் புகழ் காலத்தால் அழியாதது என்பதற்கு பல சான்றுகள் உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mgr

சினிமாவிலும் அரசியலிலும் தனது அடையாளத்தை ஆழமாக பதித்துள்ள எம்.ஜி.ஆர் தனது முதல் மனைவி இறந்த பின்பு அவரின் ஆவியுடன் பேச முயற்சித்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பெற்றிருப்பவர் எம்.ஜி.ஆர். 1917-ம் ஆண்டு இலங்கையில் பிறந்த இவர், 1936-ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் கேரக்டர் நடிகராக நடித்து பிறகு நாயகனாக உயர்ந்த எம்.ஜிஆர்.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக வளர்ந்தார்.

நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கம் தயாரிப்பு என பன்முக திறமைகளை வளர்த்துக்கொண்ட எம்.ஜி.ஆர்  எம்.ஜி.ஆரின் புகழ் காலத்தால் அழியாதது என்பதற்கு பல சான்றுகள் உள்ளது. இன்றைய அரசியல்வாதிகள் திரைத்துறையினர் கூட தங்களது மேடை பேச்சுகளில் எம்.ஜி.ஆர். பற்றி பேசாமல் இருந்ததில்லை என்று சொல்லலாம்.  இப்படி பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான எம்.ஜி.ஆர் 3 திருமணங்கள் செய்துள்ளார்.

publive-image

பெரும்பாலானேருக்கு எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி அம்மாள் என்பது தான் தெரியும். ஆனால் ஜானகி அம்மாளை திருமணம் செய்வதற்கு முன்பு எம்.ஜி.ஆருக்கு இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது. இதில் முதல் மனைவி பெயர் தான் தங்கமணி என்கிற பார்கவி. வீட்டில் அம்மா பார்த்து வைத்த பெண்ணான பார்கவியை எம்.ஜி.ஆர் 1939-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

அன்று முதல் பார்கவியின் மீது அன்பும் பாசமும் அதிகளவில் வைத்திருந்த எம்.ஜி.ஆர் சென்னையில் போர் நடந்தபோது மனைவி பார்கவியை அவரது ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதுதான் அவர் பார்கவியை பார்த்த கடைசி நாள். அடுத்த சில வாரங்களில் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி எம்.ஜி.ஆருக்கு கிடைத்துள்ளது. இதனால் எம்.ஜி.ஆர் ஊருக்கு புறப்பட்டு சென்றபோது இவர் போவதற்குள் பார்கவியை உறவினர்கள் அடக்கம் செய்துவிட்டார்கள்.

இதனால் மனமுடைந்துபோன எம்.ஜி.ஆர் தனது மனைவி பார்கவியை நினைத்தக்கொண்டே வாழ்ந்துள்ளார். தம்பி மனைவி மீது இவ்வளவு உயிராக இருக்கிறானே அவர் இறந்த விரக்தியில் தற்கொலை செய்துகொள்வானே என்ற எண்ணத்தில் எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணி எம்.ஜி.ஆர் எங்கு சென்றாலும் அவருக்கு துணையாக ஒரு ஆளை அனுப்பி விடுவாராம்.

publive-image

உடல்நலக்குறைவால் இறந்த தனது மனைவி இறுதி நாட்களில் என்ன நினைத்திருப்பாளே என்ற யோசனையோடு சுற்றிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர், ஜீவரத்தினம் என்ற பாடகியின் மூலம் இறந்த ஆவியுடன் பேசலாம் என்பதை தெரிந்துகொள்கிறார். இதனால் தனது மனைவி தங்கமணியிடம் (பார்கவி) பேசலாம் என்று எண்ணி ஜீவரத்தினம் மற்றும் அவரது கணவரை அனுகியுள்ளார்.

மூவரும் சேர்ந்து ஆவியை அழைத்து பேசக்கூடிய இடங்களுக்கு எல்லாம் செல்கின்றனர். ஆனால் அங்கேல்லாம் தங்கமணி என்ற ஆண் ஆவிதான் வந்துள்ளது எம்.ஜி.ஆரின் மனைவி வரவில்லை. இதனால் விரக்தியான எம்.ஜி.ஆர் அந்த முயற்சியை கைவிடுகிறார். அதன்பிறகு 1942-ம் ஆண்டு வீட்டில் பார்த்த சதாநந்தவதி என்பவரை திருமணம் செய்துகொள்கிறார்.

அவரும் 1962-ம் ஆண்டு இறந்துவிட, அதற்கு முன்பே நடிகை ஜானகியை பார்த்த எம்.ஜி.ஆர் தங்கமணி போலவே இருக்கிறார் என்பதால் நெருங்கி பழக்கியுள்ளார். அதன்பிறகு இருவரும் காதலிக்க தொடங்கிய நிலையில், 1963-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஜானகி அம்மாளை திருமணம் செய்துகொண்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mgr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment