New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/05/eJ0aFp14AGoOW84En2gT.jpg)
தம்பி நடிகராக இருக்கும் நிலையில், தமிழ் சினிமாவில் விஜய் நடித்த பெரிய வெற்றிப்படத்தின் மூலம் அண்ணன் தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார்.
இணையதள வளர்ச்சி அதிகரித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர் நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு முன்னணி இளம் நடிகரின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இவர் விஜயுடன் ஒரு பெரிய வெற்றிப்படத்தில் நடித்தவர். இவர் நடித்தது சில படங்கள் என்றாலும் அந்த படங்கள் விமர்சனரீதியாக பாராட்டுக்களை பெற்றுள்ளது.
அந்த நடிகர் யார் என்று தெரியுமா? அவர் தான் நடிகர் கதிர். தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள இளம் நடிகர்களில் கதிர் முக்கியமானவர். கதை தேர்வுகளில் அவர் காட்டும் துணிச்சல், கதாபாத்திரங்களுக்கு அவர் உயிரூட்டும் விதம் என எல்லாமே அவரை ஒரு தனித்துவமான நடிகராக அடையாளப்படுத்துகின்றன. 'மதயானைக் கூட்டம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர், அடுத்து 'கிருமி', 'விக்ரம் வேதா', 'பரியேறும் பெருமாள்', 'பிகில்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதிக்கு தம்பியாக நடித்த கதிர், பிகில் படத்தில் விஜயின் நண்பராக நடித்திருந்தார். ஒவ்வொரு படத்திலும் தனது மாறுபட்ட நடிப்பின் மூலம் ரசிகர்களை அசர வைக்கும் கதிர், கடைசியாக தலைக்கூத்தல் என்ற படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது, மாணவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்த சுழல் வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதனிடையே விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்த கதிரின் குழந்தைப்பருவப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தக் குழந்தைப்பருவப் படத்தில் கதிர் மிகவும் அழகாகவும், க்யூட்டாகவும் காட்சியளித்தார். இந்தப் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும், கேள்வியையும் எழுப்பியது. உண்மையில் மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளரான ஜெகதீஷன் பழனிச்சாமி, நடிகர் கதிரின் சகோதரர் என்பது திரையுலகில் பலரும் அறியாத ஒரு தகவல்.
கதிர் நடிப்பில் வெளியான மதயானை கூட்டம், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று விமர்சனரீதியாக பாராட்டுக்களையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.