மாவு ஆட்ட வந்தப் பெண், சில்க் ஸ்மிதா ஆன கதை… பிரபல நடிகர் வீடியோ பேட்டி!

Tamil Cinema Update : வாழும்போது புகழின் உச்சியில் இருந்த சில்க் சுமிதா இறந்து இத்தனை வருடங்கள் கடந்தாலும், அவரைப்பற்றி ரசிகர்கள் சமூகவலைதளங்களில் நாள்தோறும் கருத்துக்களை பகிர்ந்து வருகினறனர்

Tamil Cnema Update : தமிழ் சினிமாவில், வில்லன் காமெடியன் குணச்சித்திரம என பல கேரக்டரில் நடித்து பிரபலமான ஒரு நடிகராக வலம் வந்தவர் நடிகர் வினு சக்ரவர்த்தி. மதுரை மாட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த இவர், நடிகராக மட்டுமல்லாது எழுத்தாளராகவும் தன்னை நிரூபித்துள்ளார். மேலும் தமிழ் மலையளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள வினுசக்ரவர்த்தி, வண்டிச்சக்கரம், பொண்ணுக்கேத்த புருஷன் கோயில் புறா உள்ளிட்ட படங்களில் எழுத்தாளரக இருந்துள்ளார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரான வலம் வந்த வினு சக்ரவர்த்தி, தமிழ் சினிமாவில் சில்க் சுமிதா என்ற கவர்ச்சி நடிகையை அறிமுகம் செய்து வைத்துள்ளார். 1980-ம் ஆண்டு இவரின் வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் தான் சில்க் சுமிதா தமிழ் திரையலகில் அறிமுகமானார். அதற்கு முன்பே 1979-ம் ஆண்டு மலையாளத்தில் 2 படங்களில் சில்சுமிதா தோன்றியுள்ளார். ஆனால் அவர் பிரபலமானது வண்டிச்சக்கரம் படத்தில்தான்.

வண்டிச்சக்கரம் படத்தில், சாராயக்கடையில் கவர்ச்சி வேடத்தில் நடித்த சில்க் சுமிதா, அடுத்து பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் தியாகராஜனுக்கு ஜோடியாக தனது சிறந்த நடிப்பை வெளியிப்பத்தியிருப்பார். அதன்பிறகு ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், பிரபு உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம் கன்னடம் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் சில்க் சுமிதா.

90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வந்த சில்க் சுமிதா கடந்த 1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ந் தேதி சென்னையில் தற்கொலை செய்துகொண்டார். வாழும்போது புகழின் உச்சியில் இருந்த சில்க் சுமிதா இறந்து இத்தனை வருடங்கள் கடந்தாலும், அவரைப்பற்றி ரசிகர்கள் சமூகவலைதளங்களில் நாள்தோறும் கருத்துக்களை பகிர்ந்து வருகினறனர் இன்றளவும் ரசிகர்கள் சில்க் சுமிதா பற்றி பேசிககொண்டுதான் இருக்கிறார்கள்.

சில்க் சுமிதாவின் புகழ் இன்றும் ஒளித்துக்கொண்டிருந்தாலும், அவரை அறிமுகம் செய்து வைத்த பெருமை நடிகர் மற்றும் எழுத்தாளர் வினு சக்ரவர்த்தியையே சாரும். ஆனால் அவரும் கடந்த 2017-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இ்ந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு வினு சக்ரவர்த்தி அளித்த பேட்டி ஒன்றில், சில்க் சுமிதாவை திரையுலகில் அறிமுகம் செய்தது எப்படி என்பது குறித்து சுவாரஸ்யமாக தகவலை பகிர்ந்துகொண்டார்.

அந்த வீடியோ பதிவில்,

என்ன்னுடைய படத்தின் ஒரு பாடலுக்கு கவர்ச்சியான நடிகை வேண்டும் என்றபோது பட தயாரிப்பாளர் பல நடிகைகளின் பெயரை சொல்லியிருந்தார். ஆனால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை. புதிதாக ஒரு நடிகையை அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது.. அப்போது ஒருநாள் என்து வீட்டில் அருகில் உள்ள மாவரைக்கும் மிஷின் பக்கத்தில் உரு பெண்னை பார்த்தேன்.

அப்போது அவள் கண்களில் ஏதோ இருந்தது அனாட்டமியில் ஒரு ஈர்ப்பு இருந்தது. உடனடியாக அவளை அழைத்து உன் பெயர் என்ன என்று கேட்டேன விஜயமாலா என்று சொன்னார். தெலுங்கு என்றும் தமிழகத்திற்கு வந்து 17 நாட்கள் ஆகிறது என்றும் கூறினார். அப்போது உனக்கு இதிலே இருக்க வேண்டுமா இல்லை வேறு ஏதாவது செய்ய வேண்டுமா என்று கேட்டேன். அப்போது ஊரில் திருவிழா வந்தால் டான்ஸ் ஆடுவேன். அதுமாதிரி டாஸ்ஸ் ஆடுற மாதிரி வேஷம் வந்தா நல்லாருக்கும் என்று கூறினார்.

அதன்பிறகு நீ வேலை செய்யும் வீட்டில் சொல்லி விட்டு 2 நாட்களுக்கு பின் வந்து என்னை பாரு என்று சொல்லி அனுப்பிவிட்டேன். அதேபோல் 2 நாட்கள் கழித்து வந்த அவருக்கு எப்படி பேசுவது, எப்படி நடிப்பது, கேமராவில் எப்படி பார்ப்பது என்று 12 நாட்கள் பயிற்சி கொடுத்தேன். அப்படித்தான் சில்க் சுமிதா உருவானார். அதன்பிறகு அவரை நடிகர் சிவக்குமார் மற்றும் தயாரிப்பாளர் திருப்பூர் மணி ஆகியோரின் முன்பு கொண்டுபோய் நிறுத்தினேன். அவர்கள் அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.

அந்த பெண்ணுடன் பழக்கமே மொத்தம் 22 நாட்கள் தான் அதன்பிறகு ரஜினி கமல் என நடிகர்களின் படங்களில் நடிக்க சென்றுவிட்டார். அதன்பிறகு எனக்கும் அவங்களக்கும் தொடர்பு இல்லை. அதன்பிறகு ஒரு சில படங்களில் அவரை பயன்படுத்திக்கொண்டேன். அப்போது நான் பயிற்சி கொடுத்ததை விட இன்னும் அவர் நிறைய கற்றுக்கொண்டிருந்தார். அவர் கண்களுக்குள்ளே இரு கள்ளுக்கடைகள் உள்ளது. அவரை பார்த்தக்கொண்டே சாரயம் குடித்தால் அது இரட்டிப்பாகும்.

நான் ஒரு வாத்தியாராக இருந்து மாணவிக்கு கற்றுக்கொடுத்தேன். அவ்வளவுதான் எங்களுக்குள் இருந்த தொடர்பு. தாய் தந்தை கண்டிப்பு இல்லாமல்தான் சில்க் சுமிதா இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema actor and writer vinu chakravarthi say about silk smitha

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com