Advertisment
Presenting Partner
Desktop GIF

நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? வைரல் போட்டோஸ்!

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக அறிமுகமாகி தற்போது மு்க்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகர் அரவிந்த் சாமியின் மகள் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
aravind swa

நடிகர் அரவிந்த் சாமி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் கேரக்டரில் அறிமுகமாக பல பெண் ரசிகைகளின் மனதை கவர்ந்தவர் அரவிந்த் சாமி. 1970-ம் ஆண்டு சென்னையில் பிறந்த அரவிந்த் சாமி, முதலில் டாக்டர் ஆக வேண்டும் என்று விரும்பியுள்ளார். பாக்கெட் மணிக்காக, மாடலிங்கில் களமிறங்கிய அரவிந்த் சாமி, லயோலா, தியேட்டர் சொசைட்டியில், மாடலிங் செய்துள்ளார். ஆனால் அவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

Advertisment

அதே சமயம் விளம்பர படங்களில் நடிக்க அரவிந்த் சாமிக்கு வாய்ப்புகள் குவிந்த நிலையில், இதில் ஒரு விளம்பர படத்தை பார்த்த இயக்குனர் மணிரத்னம் அப்போது தான் இயக்கிய தளபதி படத்தில் ரஜினிகாந்தின் தம்பியாக நடிக்க வைத்தார். 1991-ம் ஆண்டு வெளியான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்து அரவிந்த் சாமிக்கு பெரிய வரவேற்பையும் கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து 1992-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அரவிந்த் சாமி, பாம்பெ, இந்திரா, புதையல், என் சுவாசக்காற்றே, உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். கடைசியாக 2006-ம் சாசனம் என்ற படத்தில் நடித்திருந்த அரவிந்த் சாமி, அதன்பிறகு தொழிலதிபராக மாறிய நிலையில், நடிப்பில் இருந்து விலகினார்.

aravind swa

ஒரு கட்டத்தில் கடுமையாக விபத்தை சந்தித்த அரவிந்த் சாமி, உடல்நல பாதிப்புக்கு உள்ளான நிலையில, உடல் எடை கூடி, தனது தலைமுடியை இழந்தார். இதனையடுத்து மீண்டும் நடிப்பில் ரீ-என்டரி கொடுத்த அரவந்த் சாமி, 7 வருட இடைவெளிக்கு பிறகு மணிரத்னம் இயக்கி 2013-ம் ஆண்டு வெளியாக கடல் படத்தின் மூலம் மீண்டும் நடிகராக ரீ-என்டரி கொடுத்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பை பெறவில்லை.

அதன்பிறகு 2015-ல் வெளியான தனி ஒருவன் படம் அரவிந்த் சாமிக்கு பெரிய திருப்புமுனையை கொடுத்தது. வி்ல்லனாக முத்திரை பதித்த இவர், அடுத்து இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்திருந்தார். அடுத்து போகன், செக்க சிவந்த வானம், பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட சில படங்களில் நடித்த அரவிந்த் சாமி, தற்போது கார்த்தியுடன், மெய்யழகன் படத்தில் நடித்து வருகிறார்.

அரவிந்த் சாமிக்கு திருமணமாகி ருத்ரா மற்றும் ஆதிரா என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இதில் தற்போது ஆதிராவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் ஆதிரா சாமியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இவர் அரவிந்த் சாமியின் மகளா என்று ரசிகர்கள் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

aravind swamy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment