New Update
/
தமிழ் சினிமாவின் நடிகரும் இயக்குனருமான அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா, நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி திருமணம் சென்னையில் சிறப்பான முறையில் நடந்து முடித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் நடிகர் அர்ஜூன். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள, இவர், ஜெய்ஹிந்த் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜூன், விஷால் நடிப்பில் பட்டத்து யானை என்ற படத்தில் அறிமுகமானார். அடுத்து அர்ஜூன் இயக்கத்தில் சொல்லிவிடவா என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதேபோல் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் தம்பி ராமையா மகன் உமாபதி 2017-ம் ஆண்டு வெளியான அதாகப்பட்டது மகா ஜனங்களே என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, மணியார் குடும்பம், திருமணம், தண்ணி வண்டி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
ஜீ தமிழில் அர்ஜூன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் உமாபதி போட்டியாளராக பங்கேற்றிருந்த நிலையில், அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவும் – உமாபதியும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு அர்ஜூன் தம்பி ராமையா இருவரும் சம்மதம் தெரிவித்தை தொடர்ந்து, இவர்களின் நிச்சயதார்த்தம் சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.
இதனிடையே உமாபதி – ஐஸ்வர்யா திருமணம் இன்று பிரம்மாண்டாக நடைபெற்றுள்ளது. திரையுலகை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அர்ஜூன் மற்றும் தம்பி ராமையா ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.