பெரிய ஹீரோனு சொல்லாதீங்க; அரசியலுக்கு வருவது அவர் விருப்பம்: அருண் பாண்டியன் மாஸ் பதில்!

தமிழ் சினிமாவில் நடிகர்கள் தயாரிப்பாளாகளை நம்புவதில்லை. தயாரிப்பாளர்களும் பெரிய மார்க்கெட் இருக்கும் ஹீரோவை வைத்து படம் எடுத்தால் நாம் பாதுகாப்பாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் நடிகர்கள் தயாரிப்பாளாகளை நம்புவதில்லை. தயாரிப்பாளர்களும் பெரிய மார்க்கெட் இருக்கும் ஹீரோவை வைத்து படம் எடுத்தால் நாம் பாதுகாப்பாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

author-image
WebDesk
New Update
Vijy Arun pandian


தமிழ் சினிமாவில் தற்போதைய நடிகர்கள் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் தானே தவிர பெரிய நடிகர்கள் அல்ல என்று கூறியுள்ள நடிகர் அருண் பாண்டியன், நடிகர் அரசியலுக்கு வருவது அவரவர் விருப்பம் என்று கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் அதிரடிக்கு பெயர் பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் அருண்பாண்டியன். 1987-ம் ஆண்டு வெளியான இளஞ்ஜோடிகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்து, சிதம்பர ரகசியம் ஊமை விழிகள், இணைந்த கைகள், ஊழியன், தாயகம், உள்ளிட்ட சில வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். வீரநடை, ரிஷி உள்ளிட்ட சில படங்களில் வில்லனாகவும், அஜித் நடித்த திருப்பதி உள்ளிட்ட சில படங்களில் கேரக்டர் நடிகராகவும் நடித்துள்ளார்.

நடிகராக மட்டும் இல்லாமல், 2002-ம் ஆண்டு வெளியான தேவன் படத்தின் மூலம் இயக்குனராகவும் முத்திரை பதித்த அருண்பாண்டியன், அடுத்து விகடன் என்ற படத்தையும் இயக்கியிருந்தார்.  2021-ம் ஆண்டு வெளியான அன்பிற்கினியாள் என்ற படத்தை தயாரித்து தனது மகளுடன் இணைந்து நடித்திருந்தார். தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக திறமை கொண்ட அருண்பாண்டியன் மீண்டும் தனது மகளுடன் இணைந்து அக்கேனம் என்ற படத்தில் நடித்திருந்தார்

இதனிடையே சமீபத்தில் லிட்டடில் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு அருண் பாண்டியன் அளித்த பேட்டியில், தமிழ் சினிமாவில் நடிகர்கள் சம்பளம் அதிகமாக உள்ளது. ஹாலிவுட்டில் கான்ட்ராக்ட் பேஸில் நடிகர்கள் படத்தில் நடிக்கிறார்கள். தெலுங்கிலும் கூட அந்த வழக்கம் உள்ளது. ஆனால் தமிழ் சினிமாவில் நடிகர்கள் தயாரிப்பாளாகளை நம்புவதில்லை. தயாரிப்பாளர்களும் பெரிய மார்க்கெட் இருக்கும் ஹீரோவை வைத்து படம் எடுத்தால் நாம் பாதுகாப்பாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

Advertisment
Advertisements

இங்கு கதைதான் மெயின் ஹீரோ. பெரியசம்பளம் வாங்கும் நடிகர்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். மார்க்கெட் எப்போவும் ஒரே மாதிரி இருக்காது. அவர்களை பெரிய ஹீரோ என்று சொல்லாதீங்க, அதிக சம்பளம் வாங்கும் ஹீரோ. நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவரவர் விருப்பம். விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார் என்றால் அவர் மக்களுக்கு நல்லது பண்ண வேண்டும் என்று நினைக்கிறார். இது அவரின் விருப்பம். நான் அரசியலுக்கு வந்த காரணம் விஜயகாந்த் தான். அவர் எனக்கு ஒரு அண்ணன் மாதிரி என்று நடிகர் அருண்பாண்டியன் உருக்கமாக கூறியுள்ளார். 

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: