மீண்டும் அஜித்துக்கு வில்லனாகும் அருண் விஜய்?
துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை லைாக நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாகவும், அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி அஜித்தின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது . இதனிடையே இந்த படத்தில். அருண் விஜய் மற்றும் அருள்நிதி இருவரும் வில்லன்களாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் விஜயுடன் இணையும் அனுஷ்கா
தமிழ் தெலுங்கின் முன்னணி நடிகையாக இருந்த அனுஷ்கா உடல் எடை அதிகாரித்ததால் கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வரும் நிலையில், தற்போது அவருக்கு மீண்டும் படவாய்ப்பு வருவதாக கூறப்படுகிறது. இதில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் அடுத்த படத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே தெய்வதிருமகள், தாண்டவம் உள்ளிட்ட படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
வாரிசு வசூலை நெருங்கும் வாத்தி
பொங்கல் தினத்தை முன்னிட்டு விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய படம் வாரிசு. ஆனாலும் சில பகுதிகளில் வாரிசு படம் வசூல் குறைந்தது. இதனிடையே கடந்த வாரம் வெளியான தனுஷின் வாத்தி திரைப்படம் வாரிசு படத்தின் வசூலை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதில் வாத்தி திரைப்படம் 3 நாட்களில் 51 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
லியோ படத்தில் இணைந்துள்ளாரா லெஜண்ட் சரவணா?
#Legend in #Kashmir #TheLegend#LegendSaravanan pic.twitter.com/fYYZ3RsvvD
— Legend Saravanan (@yoursthelegend) February 21, 2023
வாரிசு படத்திற்கு பிறகு விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதனிடையே லெஜண்ட் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அருள் சரவணன் தற்போது காஷ்மீரில் இருந்து வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், லியோ படத்தில் அருள் சரவணன் நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்து வருகிறது.
மீண்டும் தள்ளிப்போன பார்டர் படம்
Despite our willingness to meet you all at the theaters on Feb 24, 2023. The present uncertain situations are not favorable for @arunvijayno1’s #Borrder to release across the Globe.
We assure that the entertainment & film experience will be worthy of ur patience.@dirarivazhagan pic.twitter.com/G5r6OT6t50— All In Pictures (@All_In_Pictures) February 20, 2023
இயக்குனர் அறிவழகன் அருண்விஜய் இருவரின் கூட்டணியில் உருவாகியள்ள படம் பார்டர். ரெஜினி நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். அதனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், பார்டர் படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சில காரணங்களால் தள்ளிப்போன பார்டர் வரும் பிப்ரவரி 24-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போயுள்ளதாகவும், மார்ச் மாதம் பார்டர் படம் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.