Advertisment

சத்யராஜின் ஹிட் பட காப்பியா வலிமை? பிரபல நடிகர் பகீர் புகார்

Tamil Cinema Update : காவல்துறை அதிகாரியாக வரும் அஜித் குற்ற செயல்களில் ஈடுபடும் பைக் கேங்கை பிடிக்க எடுக்கும் முயற்சிகள் தான் வலிமை படத்தின் கதை.

author-image
WebDesk
New Update
சத்யராஜின் ஹிட் பட காப்பியா வலிமை? பிரபல நடிகர் பகீர் புகார்

Bayilvan Ranganathan Valimai Review Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் நேற்று வெளியான வலிமை திரைப்படம் தமிழில் சத்யராஜ் நடிப்பில் வெளியான படத்தின் காப்பி என்று பயில்வான் ரங்கநாதன் விமர்சனம் செய்துள்ளது அஜித் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின் இயக்குநர் எச்.வினோத், நடிகர் அஜித் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 2-வது முறையாக இணைந்த படம் வலிமை. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் நேற்று திரையரங்கில் வெளியானது. இதற்காக முந்தைய நாள் இரவிலேயே கொண்டாட்டத்தை தொடங்கிய அஜித் ரசிகர்கள் அஜித் கட்டவுட்க்கு பாலபிஷேகம், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என திருவிழா போல் அலங்கரித்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை வலிமை திரைப்படத்தின் ரசிகர்கள் சிறப்பு காட்சி காலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. ஹூமா குரோஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, உள்ளிட்ட பல நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். திலிப் சுப்புராயன் சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார். காவல்துறை அதிகாரியாக வரும் அஜித் குற்ற செயல்களில் ஈடுபடும் பைக் கேங்கை பிடிக்க எடுக்கும் முயற்சிகள் தான் வலிமை படத்தின் கதை.

publive-image

இந்த திரைப்படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அஜித் ரசிகர்கள் மத்தியில் வலிமை திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், சினிமா நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன், வலிமை படம் சத்யராஜ் நடிப்பில் வெளியான வால்டர் வெற்றிவேல் படத்தின் காப்பி என்று விமர்சனம் செய்துள்ளார்.

பெண்களை வைத்து தவறாக படம் எடுக்கும் கும்பலை பிடிக்க முயற்சிக்கும் துடிப்பான காவல்துறை அதிகாரியாக நாயகனுக்கு ஒரு கட்டத்தில் அப்பாவி போல் இருக்கும் தன் தம்பியே இந்த கும்பலில் ஒருவன் என்று தெரிந்த உடன் என்ன செய்யபோகிறார் என்பதே வால்டர் வெற்றிவேல் படததின் கதைகரு. தற்போது வெளியாகியுள்ள வலிமை படத்தில் அஜித்குமார் சத்யராஜ் கேரக்டரில் நடித்துள்ளார். என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

மேலும் வால்டர் வெற்றிவேல் படத்தில் சத்யராஜின் தம்பி வில்லனுடன் இருப்பது போல் வலிமை படத்திலும் அஜித்தின் தம்பி வில்லன்களுடன் பயணித்து வருகிறார். இந்த இரண்டு படத்திற்கும் உள்ள வேறுபாடு சண்டை காட்சிகள் தான். வால்டர் வெற்றிவேல் படத்தை இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்றதுபோல் இயக்குநர் எச்.வினோத் அஜித்தை வைத்து கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளர்ர்.

publive-image

இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் பலரும் பயில்வான் ரங்கநாதனை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். சமீபகாலமாக சினிமாத்துறையில் உள்ள நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என பலரையும் குறித்து பயில்வான் ரங்கநாதன் அவதூறாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Ajith Valimai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment