இந்திய சினிமாவில் மிக சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்று பெயரெடுத்துள்ள பாக்யராஜ் தான் முதலில் நடித்த படம் தொடர்பான சுவாரஸ்யமான அனுபவத்தை பற்றி கூறியுள்ளார்.
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உதவி இயக்குனராக இருந்து அவரின் புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் பாக்யராஜ். அதற்கு முன்பே படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் இவர் முதன் முதலாக திரையில் தோன்றிய படம் 16 வயதினிலே.
இயக்குனர் பாரதிராஜாவின் முதல் படமாக இதில் கமல்ஹாசன் ஸ்ரீதேவி, ரஜினிகாந்த், காந்திமதி, கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். ஸ்டூடியோவுக்குள் இருந்த தமிழ் சினிமாவை முதன் முதலாக வெளியில் கொண்டுவந்த பெருமை கொண்ட இந்த படம் தமிழ் சினிமாவில் அடையாளமாக உள்ளது.
இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பாக்யராஜ் ஒரு வைத்தியர் வேடத்தில் நடித்திருப்பார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், படத்தில் ஸ்ரீதேவி அம்மா இறந்துவிட்டதால், அவருக்கு உடல்நலை சரியில்லாமல் இருக்கும். அப்போது அவருக்கு வைத்தியம் பார்ப்பதற்காக ஒரு வைத்தியர் வரவேண்டும். பலரையும் முயற்சி செய்து பார்த்தோம் ஆனால் அந்த கேரக்டருக்கு யாரும் செட் ஆகவில்லை.
நடிப்பு நன்றாக வந்தால் தமிழ் தெரியவில்லை. தமிழ் நன்றாக தெரிந்தால் நடிப்பு வரவில்லை. இந்த மாதிரியான ஒரு சூழலில் தான் பாரதிராஜா சார் என்னை நடிக்க சொன்னார். முதன் முதலில் திரையில் வரப்போகிறோம் என்று நானும் ஓகே சொல்லிவிட்டேன். ஆனால் கமல்ஹாசனுக்கு இதில் உடன்பாடு இல்லை. அவர் என்னை நடிக்க வைக்க வேண்டாம் என்று பாரதிராஜாவிடம் சொல்லிக்கொண்டே இருந்தார்.
ஆனால் அவர் கமல்ஹாசனை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தார். ஆனாலும் அதற்கு உடன்படாத கமல்ஹாசன் நான் நடிக்கும்போது இடையில் தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தார். நான் ஒரு டைலாக் பேசினால் அதற்கு அவர் ஆஹா அப்புறம் என்று கிண்டல் செய்வது போல் செய்வார். ஆனாலும் நான் எப்படியாவது இந்த கேரக்டரை செய்துவிட வேண்டும் என்று நினைத்தேன்.
அதனால் கட்சி எடுக்கும்போது அவர் முகத்தை பார்க்கவே இல்லை மருத்து கொடுத்துவிட்டு. இத்தனை நாள் ஆத்தா இருந்தா இனிமே மயிலுக்கு யாருயா இருக்கா நீதான் இருக்க. இதை எப்போது கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்துவிட வேண்டும். இதுதான் டைலாக். இந்த சீனில் கமல்ஹாசன் நான் சொல்ல சொல்ல தலையை ஆட்டிக்கொண்டு இருக்க வேண்டும். நான் டைலாக் எல்லாம் சொல்லி முடித்துவிட்டு என்ன புரிஞ்சுதா என்று கேட்பேன் அதற்கும் அவர் தலையை ஆட்டுவார்.
அதற்கு நான் எதற்கெடுத்தாலும் சாமி மாடு மாதிரி தலையை ஆட்டிக்கோ என்ன புரிஞ்சதோ என்று சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் வந்துவிட்டேன். இந்த டைலாக் நானே பேசியது. அதன்பிறகு பாரதிராஜா என்னை அழைத்து என்னயா இப்படி பேசிட்டு வந்துட்ட என்று கேட்டார் என்னை அவர் வாரிக்கிட்டு இருந்தாரு. எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சது நான் வாரிட்டேன் என்று சொன்னேன் என கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil