கமல், பிரபுவுக்கு ரீல் மகன்; இவரது அப்பா மிகப்பெரிய நடிகர்: இந்த சிறுவன் யார் தெரியுமா?

கமல்ஹாசன் மற்றும் பிரபுக்கு மகனாக நடித்த பிரபல நடிகரின் மகன் தற்போது கவனிக்கப்படும் நடிகராக வளர்ந்துள்ளார்.

கமல்ஹாசன் மற்றும் பிரபுக்கு மகனாக நடித்த பிரபல நடிகரின் மகன் தற்போது கவனிக்கப்படும் நடிகராக வளர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Prapajan Vikram

சினிமாவில் ஹீரோவாகவோ அல்லது முக்கிய கேரக்டர்களிலோ நடிக்கும் நடிகர்கள், அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி ஹீரோவாக நடிக்க தொடங்கிவிடுவார்கள். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், வாரிசு நடிகர்களுக்கு சினிமாவில் எப்போதும் வாய்ப்புகள் குவிந்து வரும். அந்த வகையில், கமல்ஹாசன் மற்றும் பிரபுக்கு மகனாக நடித்த பிரபல நடிகரின் மகன் தற்போது கவனிக்கப்படும் நடிகராக வளர்ந்துள்ளார்.

Advertisment

இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் விக்ரம். 80-களில் வெளியான விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்திருந்தது. கமல்ஹாசனின் திரை வாழ்க்க்கையில் பெரிய வெற்றிப்படமாக மாறிய விக்ரம் படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார்.

Jayaram mn

பகத் பாசில், நரேன், சந்தான பாரதி, இளங்கோ குமாரவேல் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில், கேமியோவில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் சூர்யா நடித்திருந்தார். அதேபோல் இந்த படத்தில் கமல்ஹாசனின் மகனாக நடித்திருந்தவர் தான் காளிதாஸ் ஜெயராம். தமிழ், தெலுங்கு, மலையாளம், என தென்னிந்திய மொழிகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் ஜெயராமின் மகனான இவர், மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நிலையில், 2016-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடித்தார்.

Advertisment
Advertisements

கமல்ஹாசன் கேமியோ ரோலில் நடித்திருந்த இந்த படத்தில், பிரபு, ஊர்வசி, ஆஷ்னா சவேரி, பூஜா குமார், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அடுத்து மலையாள படங்களில் நடிக்க தொடங்கிய இவர். 2020-ம் ஆண்டு புத்தம்புது காலை, மற்றும் பாவக்கதைகள் என இரு ஆந்தாலஜி படங்களில் நடித்திருந்தார். இதில் பாவக்கதைகள் படத்தில் அவர் ஏற்று நடித்த தங்கள் என்ற கேரக்டர் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. ரசிகர்கள் மத்தியிலும் இந்த கேரக்டருக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

Taiwan wrap

அடுத்து ஒரு பக்க கதை படத்தில் நடித்திருந்த காளிதாஸ், 2022-ம் ஆண்டு விக்ரம் படத்தில் கமல்ஹாசனின் மகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் ஐபிஎஸ் அதிகாரி பிரபஞ்சன் என்ற கேரக்டரில் நடித்திருந்த காளிதாஸ், கேமியோ போலே நடித்திருந்தாலும், அவரது கேரக்டர் பெரிய கவனம் ஈர்த்தது. அதன்பிறகு போர், இந்தியன் 2, உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த காளிதாஸ் கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ராயன் படத்தில் தனுஷின் தம்பியாக நடித்திருந்தார், இந்த படமும் பெரிய வெற்றியை பெற்று ரூ100 கோடிக்கு மேல் வசூலித்ததாக தகவல்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: