/indian-express-tamil/media/media_files/2025/08/22/master-raght-2025-08-22-23-19-19.jpg)
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல நடிகர்கள். வளர்ந்து பெரியவர்களாக மாறும்போது அந்த சிறுவனா இவர் என்ற பிரமிப்பு எல்லோருக்கும் இருக்கும். அநத வகையில் ஜெய்சங்கருடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக நடித்த ஒரு நடிகர் பல ஆண்டுகளாக சினிமா வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். அவர் யார் தெரியுமா?
1967-ம் ஆண்டு பிறந்த இவர், தனது 5 வயதில் 1962-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான, அச்சனும் பாப்பாயும் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து, 1980 வரை மலையாளத்தில் பல வெற்றிப்படங்களில் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரமாக கேரளா அரசின் மாநில விருதை 3 முறை வென்றுள்ளார். 1975-ம் ஆண்டு வெளியான ஜெய்சங்கரின் எங்க பாட்டன் சொத்து என்ற தமிழ் படத்தில் நடித்த இந்த சிறுவனின் பெயர் மாஸ்டர் ரகு.
1982-ம் ஆண்டு முதல் நடிகராக களமிறங்கிய ரகு, 1991-ம் ஆண்டு தீச்சட்டி கோவிந்தன் என்ற படத்தில் நடித்திருந்தார். இளைஞராக அவர் நடித்த முதல் படம் இதுதான். அதன்பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாமலை படத்தில் அவருக்கு மருமகனாக நடித்திருந்த இவர், 1994-ம் ஆண்டு கமல்ஹாசனின் நம்மவர் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த மாஸ்டர் ரகு தான், 90-ஸ் குழந்தைகளில் ஃபேவரெட் நடிகர் வில்லன், பின்னாளில் ஹீரோ என பல பரினாமங்களை கொண்ட நடிகர் கரண்.
நம்மவர் படத்திற்கு பின் தொடர்ந்து தமிழில் கவனம் செலுத்திய கரண், பல வெற்றிப்படங்களில் 2-வது நாயகனாக நடித்துள்ளார். நெகடிவ், பாசிட்டீவ், என பல கேரக்டர்களில் நடித்துள்ள இவர், விஜயுடன், சந்திரலேகா, கோயம்புத்தூா மாப்பிள்ளை, காலமெல்லாம் காத்திருப்பேன். லவ்டுடே, நேருக்கு நேர், மின்சார கண்ணா, அஜித்துடன் காதல மன்னன், காதல் கோட்டை என பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள கரண், பிரஷாந்துடன் கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் சிம்ரனின் அண்ணன் கேரக்டரில் நடித்திருந்தார்.
குறிப்பாக, சாமி படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் தான் கரண். 2006-ம் ஆண்டு கொக்கி என்ற படத்தில் நாயகனாக நடித்த இவர், அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கருப்புசாமி குத்தகைதாரர் என்ற பெரிய வெற்றிப்படத்தை கொடுத்தார். இந்த இரு படங்களும் அவருக்கு கை கொடுத்த நிலையில். அடுத்து, தீ நகர், காத்தவராயன், மலையன், கனகவேல் காக்க, தம்பி வெட்டோத்தி சுந்தரம், கந்தா சூரன் ஆகிய படங்களில் நாயகனாக நடித்த கரண், மலையன் படம், சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருதை வென்றிருந்தது.
கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு உச்சத்துல சிவா என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு திரைப்படங்கில் நடிக்காத கரணின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.