Advertisment

வசூலை குவிக்கும் லவ்டுடே, நடிகர் அர்ஜூன் மீது புகார்... டாப் 5 சினிமா செய்திகள்

படத்தின் நாயகனான விஷவக் சேனாவுக்கு தொழில் பக்தி இல்லை என்று அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக தெரிவித்த அர்ஜூன் அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.

author-image
WebDesk
New Update
வசூலை குவிக்கும் லவ்டுடே, நடிகர் அர்ஜூன் மீது புகார்... டாப் 5 சினிமா செய்திகள்

நடிகர் அர்ஜூன் மீது புகார்

Advertisment

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட அர்ஜூன், பிரபல தெலுங்கு நடிகர் விஷ்வக் சேனா மற்றும் தனது மகள் ஐஸ்வர்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருந்தார். ஆனால் இந்த படத்தின் நாயகனான விஷவக் சேனாவுக்கு தொழில் பக்தி இல்லை என்று அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக தெரிவித்த அர்ஜூன் அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.

தற்போது அர்ஜூன புகாருக்கு பதில் அளித்துள்ள நடிகர் விஷ்வக் சேனா, அந்த படத்திற்காக நிறைய உழைப்பை கொடுத்தேன். ஆனால் எனக்கும் அர்ஜூனுக்கும் சுமூகமான சூழல் இல்லை. கதை பற்றி நன்றாக விவாதித்து படப்பிடிப்பை நடத்தலாம் என்று சொன்னேன். எனது ஆலோசனைகளை கேட்டகவில்லை. நானாக படத்தில் இருந்து விலகவில்லை. அவர் நல்ல படம் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

35 வருடங்களுக்கு பிறகு கமல் – மணிரத்னம் கூட்டணி

தமிழ் சினிமாவின் உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று தனது 68-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்த நிலையில், அவர் தற்போது நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கு பிறகு கமல் யார் இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்த நிலையில். கமலின் அடுத்த படத்தை மணிரத்னம் இயக்க உள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1987-ம் ஆண்டு வெளியான நாயகன் படத்திற்கு பின் 35 ஆண்டுகளுக்கு பிறகு கமல் மணிரத்னம் கூட்டணி இணைய உள்ளது.

வசூலை குவிக்கும் லவ்டுடே

கோமாளி இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அவரே நாயகனாக நடித்துள்ள படம் லவ்டே. காதலவர்கள் சமூக வலைதளத்தின் உண்மை முகத்தை காட்டியுள்ள இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில்ஷஷஷ. வசூலில் சாதனை படைத்து வருகிறது. தற்போதுவரை லவ்டுடே 4 நாட்களில் சுமார் 17 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரைத்துரையில் 17 ஆண்டுகளை நிறைவு செய்த அனுஷ்கா

தமிழ் தெலுங்கின் முன்னணி நடிகையாக அனுஷ்கா கடந்த 2005-ம் ஆண்டு: தெலுங்கில் வெளியான சூப்பர் என்ற படத்தின் மூலம் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து 2006-ம் ஆண்டு வெளியான ரெண்டு படத்தின் மூலம் தமிழுக்கு வந்த அவர், விஜய். அஜித், விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இவர் நடிப்பில் அருந்ததி. பாகுபலி படங்கள் நல்ல வரவேற்பை பெற்று இவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்தது. தற்போது 41 வயதாகும் அனுஷ்கா திரைத்துரையில் 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

இந்தியன் 2 படக்குழுவுடன் பிறந்த நாள் கொண்டாடிய பிரபல நடிகர்

சூது கவ்வும், இறைவி, ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பாபி சிம்ஹா, தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே நேற்று தனது பிறந்த நாளை இந்தியன் 2 படக்குழுவினருடன் கொண்டாடிய பாபி சிம்ஹா, குழுவினருடன் இணைந்து கேக் வெட்டியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment